லாக் டவுன் நேரத்தில்... மோகன் லால் செய்த சூப்பர் செயல்..! வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டு..!

Published : Apr 25, 2021, 05:15 PM ISTUpdated : Apr 25, 2021, 05:17 PM IST
லாக் டவுன் நேரத்தில்... மோகன் லால் செய்த சூப்பர் செயல்..! வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டு..!

சுருக்கம்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால், தற்போது லாக் டவுன் நேரத்தில் தன்னுடைய வீட்டில் இயற்கை வேளாண்மை தோட்டம் அமைத்துள்ள வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இவரது செயலுக்கு ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.  

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால், தற்போது லாக் டவுன் நேரத்தில் தன்னுடைய வீட்டில் இயற்கை வேளாண்மை தோட்டம் அமைத்துள்ள வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இவரது செயலுக்கு ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த வருடம் போடப்பட்ட லாக் டவுன் காரணமாக, ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகமும் முடங்கியது. படப்பிடிப்புகளில் பிசியாக இயங்கி கொண்டிருந்த பிரபலங்கள் பலரும்... தங்களுடைய குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரம் செலவிட்டது மட்டும் இன்றி, தங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்ய துவங்கினர். அந்த வகையில் வீட்டை சுத்தம் செய்வது முதல், பாத்திரம் கழுவுவது, சமயம் செய்வது போன்ற வீடியோக்களையும் அவ்வப்போது பிரபலங்கள் வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டது.

நடிகர் மோகன் லால், அவருடைய வீட்டில் மிகப்பெரிய இயற்க்கை வேளாண் தோட்டம் ஒன்றை உருவாக்கி, சுரைக்காய், கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பாவக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை வளர்க்க துவங்கினார். அந்த தோட்டத்தை ஆட்கள் வைத்து பராமரித்து வந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று செடிகளை பராமரித்து வருகிறார்.

கொரோனாவின் முதல் அலை சற்று குறைய துவங்கியதும், மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியான மோகன் லால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக போடப்பட்டுள்ள லாக் டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் செடி கொடிகளை கவனிக்க துவங்கியுள்ளார்.

தன்னுடைய வீட்டு தோட்டத்தை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ... ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பலரும் மோகன் லாலில் இந்த செயலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!