
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கான ரசிகர்கள் பட்டாளம் சற்று அதிகம் என்றே கூறலாம். வழக்கமான சீரியல்களை போல், வில்லி, எந்நேரமும் அழுகை, போலீஸ், கொலை, பழுவாங்குவது என்று இல்லாமை, சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
'ஆனந்தம்' , 'எங்கள் அண்ணன்' , போன்ற திரைப்படங்களை போல் இந்த சீரியல் முழுக்க, முழுக்க அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்த சீரியலில்... ஒரே மாதிரியே கதை சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் 'பாக்கிய லட்சுமி' சீரியலுடன் சங்கமித்து ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து மீண்டும் இந்த சீரியல் மீதான, விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதாவது, வரும் வாரங்களில் சத்திய மூர்த்தி மற்றும் தனம் திருமணம் எப்படி நடந்தது? என்பது குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாக உள்ளது. எழுந்து நடக்க முடியாத அம்மா, மூன்று தம்பிகளையும் பார்த்து கொண்டு, அனைத்தையும் பொறுப்பாக பார்த்து கொள்ளும் சத்திய மூர்த்தியை திருமணம் செய்து கொள்ள இருந்த மணப்பெண் திடீர் என மண்டபத்தை விட்டு ஓடி போய் விட, எப்படி தேவதை போல் தனம் சத்திய மூர்த்தி வாழ்க்கையில் வருகிறாள் என்பதை தான் சில வாரங்கள் காட்ட போகிறார்கள்.
இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி... இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.