அரசியலில் அஜித்..! அ.தி.மு.க.வுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க ரெடி... தலயிடம் தாறுமாறாக கெஞ்சி சக்ஸஸ் செய்த ஆளுங்கட்சி..!

By Vishnu PriyaFirst Published Apr 1, 2019, 1:49 PM IST
Highlights

எது நடக்கக்கூடாது என்று ஸ்டாலின்,  உதயநிதி மற்றும் சபரீசன் மூன்று பேரும் சப்தமில்லாமல் போராடினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. ஆம், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் ‘ஆபரேஷன் அஜித்’ ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

எது நடக்கக்கூடாது என்று ஸ்டாலின்,  உதயநிதி மற்றும் சபரீசன் மூன்று பேரும் சப்தமில்லாமல் போராடினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. ஆம், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் ‘ஆபரேஷன் அஜித்’ ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தயாராகிவிட்டார்! என்று ஆதாரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

எப்படி நடந்தது இந்த மாயம்?.... இது பற்றி மிக விரிவாக பேசும் அரசியல் பார்வையாளர்கள் “சமீபத்தில் தைப்பொங்கல் சமயத்தில் ரஜினிக்கும், அஜித்துக்கும் இடையில் மிகப்பெரிய சினிமா யுத்தம் நடந்தது. ஆக்சுவலாக ரஜினி தரப்புதான் அஜித்தை தேவையில்லாமல் சீண்டி பிரச்னையை உருவாக்கியது என்று சொல்ல வேண்டும். அதாவது ஜனவரி 14 பொங்கலை மனதில் வைத்து அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் துவங்கப்பட்டது. ரிலீஸ் தேதியை முதலிலேயே அறிவித்துவிட்டுதான் ஷூட்டுக்கு போனார்கள் அஜித் மற்றும் சிறுத்தை சிவா இருவரும். இவர்கள் படப்பிடிப்பை துவக்கிய பிறகுதான் ரஜினியோடு ‘பேட்ட’ ப்ராஜெக்டை கமிட் செய்தார் ஸ்டாலினின் ரத்த உறவினரான கலாநிதி மாறன். அவரது சன்பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

 

எதிர்பார்த்ததை விட மிக வேகமாக படத்தை முடித்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்து ரிலீஸை பற்றி யோசித்தவர்கள் பொங்கலை குறிவைத்தனர். ஆனால் இயக்குநரோ ‘ஏற்கனவே அஜித் சார் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்றதா சொல்லித்தான் வேலையை துவக்கினாங்க. இப்ப அவங்க ரெடியாகிட்டாங்க. இந்த நேரத்துல நாம நுழைஞ்சா சரியா இருக்காது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மெகா ஸ்டார் படங்களை வெளியிட வேண்டாம்! அப்படின்னு ஏற்கனவே சங்கத்திலும் உத்தரவு இருக்குது. அதனால நாம கொஞ்சம் வெயிட் பண்ணி வெளியிடலாம்.’ என்றார்.

  

ஆனால் தயாரிப்பாளர் கலாநிதியோ அதற்கு சம்மதிக்கவில்லை. ‘அதென்ன அஜித்தை பார்த்து நாம பயப்படுறது? அவரென்ன ரஜினியை விட பெரிய ஸ்டாரா? நம்ம கையில ரஜினியே இருக்குறப்ப இவரையெல்லாம் பத்தி நாம ஏன் யோசிக்கணும்? ரேஸுக்கு பயந்தால், அவங்க வேணா வெயிட் பண்ணி ரிலீஸ் பண்ணிக்கட்டும்.’ என்று தெனாவெட்டாய் கேட்டபடி பேட்ட ரிலீஸுக்கு தயாரானார். இந்த விஷயம் ரஜினியின் காதுகளுக்கு போக, அவர் கலாநிதியிடம் விசாரித்தபோது ‘சார், எங்களுக்கு நீங்க இருக்கிறப்ப எந்த ஸ்டாரையும் பற்றி கவலையில்ல’ என்றார். ரஜினிக்கும் இந்த ரேஸ் பிடித்தது. பேட்ட படத்தின் மேல் அசைக்கமுடியத நம்பிக்கை வெச்சிருந்த ரஜினி, தனக்கு அடுத்த தலைமுறை மெகா ஸ்டாரையும் தாண்டி தான் பெரிய ஆள்ன்னு காட்டிக்க முடிவு பண்ணி ரிலீஸுக்கு ஓ.கே. சொன்னார்.  

இதனால் விஸ்வாசம் வெளியிடுவதற்காக ஸ்கெட்ச் பண்ணியிருந்த தியேட்டர்களை சன்பிக்சர்ஸ் விழுங்க துவங்குச்சு, கூடவே ஸ்டாலினின் மகன் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸும் பேட்ட பட பிஸ்னஸில் கை வைத்து தன் பங்குக்கு தியேட்டர்களை பிடிக்க துவங்குச்சு. இதெல்லாமே அஜித்தின் காதுகளுக்குப் போனதும் தல செம்ம டென்ஷனாயிட்டார். ‘நான் பாட்டுக்கு என் பாதையில தனியா போயிட்டிருக்கேன். ஏன் இப்படி உள்ளே வந்து இம்சை பண்றாங்க? ரஜினி சார் மேலே பெரிய மரியாதை வெச்சிருக்கேன். அவரும் இப்படி பண்றாரே!’ அப்படின்னு தன் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவிடம் வருத்தப்பட்டவர்...சில நொடிகள் யோசிச்சுட்டு ‘தப்பு  என் மேலே இல்ல. நாம ஏற்கனவே சொல்லிட்டுதான் வேலையை துவக்குனோம்.

 

நான் ஏன் பின் வாங்கணும்? அதனால மோதிப் பார்த்துடலாம்.  ரஜினி படத்தை விட நம்ம படம் அதிக ஸ்கிரீனில் ரிலீஸாகணும். படத்தோட வெற்றியை  என் ரசிகர்கள் பார்த்துக்குவாங்க.’ அப்படின்னுன்னு மெரட்டலா சபதம் போட்டார்.  ரெண்டு பக்கமுமே ரேஸ் தீ பிடிச்சு எரிஞ்சுது. ரெண்டு படமுமே ஒரே நாளில் ரிலீஸாச்சு. ஆனால் பேட்டயை விட விஸ்வாசம் அதிக தியேட்டர்களில் ரிலீஸானதோடு, வசூல், மாஸ், வெற்றின்னு எல்லா விதத்திலேயும் அடிச்சு தூக்கி கலக்கலாய் வென்றார் அஜித். இத்தனைக்கும் விஸ்வாசம் படத்தின் ஒரே தூண் தல தான். ஆனால், பேட்டயில் ரஜினியோடு சேர்த்து விஜய் சேதுபதி உள்ளிட்ட பல சர்ப்பரைஸ், மெகா ஹிட் பாடல்கள் இருந்தும் கூட விஸ்வாசத்தின் முன் சறுக்கியது பேட்ட. சமூக வலைதளங்களில் ‘அஜித்திடம் தோற்ற ரஜினி’ன்னு வெளுத்தெடுத்தாங்க. பேட்ட பின்வாங்கியதில் ரஜினியை விட கலாநிதி மாறன், உதயநிதி இருவரும்தான் அதிகமா டென்ஷனானாங்க. 

இந்த இடத்தில்தான் ஒரு அரசியல் ட்விஸ்ட் வந்துச்சு. அதாவது ஸ்டாலின் கோஷ்டியை சேர்ந்தவர்களின் பேட்ட ப்ராஜெக்டை போட்டுப் பொளப்பதில் அஜித்துக்கு அ.தி.மு.க. அரசு தரப்பு கைகொடுத்துச்சுன்னு ஒரு பேச்சு எழுந்துச்சு. இதை மக்கள் நம்பினாங்க. காரணம், அஜித்துக்கு ஜெயலலிதான்னு ரொம்பவே ப்ரியம். அஜித்தின் திருமணத்துக்கு வந்து ஏதோ தன் பையனோட கல்யாணத்துல நிற்கிறது மாதிரி ஏக சந்தோஷமா நின்னு, அன்பளிப்பு கொடுத்து வாழ்த்திட்டு போனாங்க ஜெ., அதேமாதிரி கருணாநிதி கடைசி முறையா முதல்வராக இருந்தப்ப, அவருக்காக திரையுலகம் நடத்துன பாராட்டுவிழா மேடையில் ‘விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா’ என்று வெளிப்படையாக அஜித் வெடித்ததில் இருந்தே தி.மு.க.வுக்கும், அஜித்துக்கும் இடையில் பெரிய விரிசல், உரசல்தான். 

இதனால் ஜெயலலிதா அஜித் மேல் ரொம்பப் பெரிய பாசம் காட்டினார். இந்த அன்பு கடைசி வரைக்கும் நீடிச்சுது. அந்த அடிப்படையில்தான் விஸ்வாசம் படத்தின் சக்ஸஸ்காக ஆளுங்கட்சி நிறைய  உதவிகளை அஜித்துக்கு செஞ்சு கொடுத்ததா ரஜினியும், கலாநிதியும், ஸ்டாலினும், உதயநிதியும் நம்பினாங்க. விஸ்வாசம் பரபரப்பு சமயத்தில் தமிழிசை, அஜித்தை தங்கள் கட்சி பக்கம் இழுக்குற மாதிரி ஒரு ஸ்டண்டை போட்டாங்க. உடனே சூடாக பதில் தந்த அஜித் அந்த ஆஃபரை மறுத்தார். ஆனாலும் தன் அபிமான அ.தி.மு.க. தனக்கு செஞ்ச உதவிக்கு கைமாறு செய்ய நினைத்தார். இந்த நேரத்தில்தான் தேர்தல் வந்து சேர்ந்துச்சு. கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து நாட்களாக அஜித்தை தங்களுக்கு ஆதரவாக மாற்ற இ.பி.எஸ். தரப்பு தொடர்  முயற்சியில் இறங்குச்சு. 

ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை தொடர்ந்து பல தூதர்கள் மூலமாக தொடர்பு கொண்டு பேசினாங்க. அதுக்கு துவக்கத்தில் ‘எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அம்மா மேலே எனக்கு எப்பவுமே பெரிய அன்பு, மரியாதை உண்டு. அதுக்காக சப்போர்ட்லாம் பண்ணுறது சாத்தியமில்லை.’ என்றாராம். ஆனால் விடாத ஆளும் தரப்போ ‘நீங்க வெளிப்படையா எதுவும் பேச வேண்டாம். எதேச்சையாக போகும் வழியில் பார்த்த ஜெயலலிதாவின் படத்துக்கு ச்சும்மா பூவோ அல்லது வணக்கமோ  வைக்கிற மாதிரி ஒரு மொபைல் போட்டோவுக்கு மட்டும் ஓ.கே.பண்ணுங்க. மற்றதை நாங்க பார்த்துக்குறோம். அஜித்தின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு நாங்க பரப்புரை பண்ணிக்கிறோம்.

 

நீங்க எதையும் கண்டுக்காம கடந்து போயிடுங்க. உங்களோட அந்த போட்டோவை பார்த்ததுமே, சரி தல ஆதரவு அ.தி.மு.க.வுக்குதான்னு உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்கள் புரிஞ்சுக்கிட்டு எங்களை ஆதரிப்பாங்க. காரணமே இல்லாம உங்களை விரும்புற பல லட்சம் மக்களும் எங்களுக்கு கை கொடுப்பாங்க. அம்மாவுக்கு நீங்க செய்யக்கூடிய ஒரு அன்பா இது இருக்கட்டும். தேர்தல் முடிஞ்ச பிறகு ‘எனக்கு என்றும் அரசியல் ஈடுபாடு இல்லை’ன்னு மறுத்துடுங்க. ஒரு பிரச்னையுமில்லை. அம்மாவின் ஆட்சி தொடர கைகொடுங்க தம்பி!” என்றார்களாம். 

ஓவராய் யோசித்துவிட்டு ஒரு கட்டத்தில் ஓ.கே. என தலையாட்டிவிட்டார் அஜித். எல்லாம் ஜெயலலிதாவின் மேல் இருக்கும் அன்புதான். அஜித் இப்படி சொன்னதும் செம்ம குஷியாகிவிட்டது அ.தி.மு.க. தரப்பு. எப்ரல் பத்து தேதி போல் இந்த ப்ராஜெக்டை கையிலெடுக்கிறார் இ.பி.எஸ். ஜெ., போட்டோவை அஜித் வணங்கும் ஒரு மொபைல் க்ளிக் வைரலாகும், தொடர்ந்து ‘ajithforadmdk#’ என்பது போன்ற ஹேஸ்டேக்குகளை அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் பரப்பி செம்ம வைரலாக்கும், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு பல வடிவங்களில் தலயின் ஆதரவு தங்களுக்கே எனும் பிரசாரத்தை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். 

போதாக்குறைக்கு அஜித்தின் ரசிகர்களும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு இதை ஷேர் செய்வார்கள். பற்றி எரியும் தல வைரலில் ஆளுங்கட்சி அமோகமாக நாற்பது பிளஸ் பதினெட்டு தொகுதிகளை அடிச்சு தூக்கும். அட அத்தனையும் கிடைக்காவிட்டாலும் கூட எழுபத்தைந்து சதவீதத்துக்கும் மேலேயாவது ஆளுங்கட்சி ஸ்கோர் பண்ண தல யின் தந்திரம் கைகொடுக்கும்.” என்று முடித்தார்கள். இந்த தகவலை அப்படியே தனது ஸ்பை காவல்துறை அதிகாரிகள் மூலம் ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின் மண்டை காய்ந்து போய்விட்டாராம். 

தலயின் அரசியல் வைரலுக்கு எதிராக ரஜினியை குரல் கொடுக்க வைத்தால் மட்டுமே ஓரளவு டஃப் கொடுக்க முடியும். ஆனால், ஏற்கனவே தங்களோடு உரசிக் கொண்டிருக்கும் ரஜினி, தன் அபிமான பி.ஜே.பி.க்கே ஆதரவு கொடுக்காத நிலையிலும், மோடியை எதிர்த்துக் கொண்டும் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கவே மாட்டார் என்பது ஸ்டாலினின் திடமான வருத்தம். ஆக கண் முன்னேயே தி.மு.க.வின் தள்ளாட்டம் தல யின் ஆட்டத்தினால் துவங்குவதுதான் அரசியலின் லேட்டஸ் ஹாட்டஸ். தல மேஜிக் என்ன பண்ணுதுன்னு கவனிப்போம்!(இப்படியெல்லாம் அஜித் ஓ.கே. சொன்னால் அ.தி.மு.க.வுக்கு குஷியோ குஷிதான். ஆனா நடக்கிற காரியமா அது? ஏதோ ஏப்ரல் 1-ம் தேதியன்று உங்களை ஏமாந்த குருவியாக்க ஏஸியாநெட் தமிழின் ஒரு முயற்சி. செம்மயா ஏமாந்தீங்களா குருவிகளா)

click me!