”நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்”...உணர்ச்சி வசப்படும் கமல்...

Published : Apr 01, 2019, 01:02 PM IST
”நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்”...உணர்ச்சி வசப்படும் கமல்...

சுருக்கம்

 நாங்கள் கிராமத்தில் இருந்து தான் தொடங்கினோம். எங்களுக்கு நல்ல யோசனைகள் கொடுப்பதே எங்களின் விரோதிகள் தான். அவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த யோசனையே வந்திருக்காது.  

”என்னை புகழின் உச்சியில் வைத்த மக்களுக்கு நான் செய்தது என்ன என நான் என்னைக் கேட்டுக்கொண்ட போது, குற்ற உணர்வுதான் மிஞ்சியது. அதனால்தான்  தாமதமானாலும் பரவாயில்லை என மக்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்” என்று மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

புதுச்சேரி ஏஎஃப்டி மைதானத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியனை ஆதரித்துப் பேசிய கமல்,” நான் களத்தில் இறங்க மாட்டேன் என சொன்னார்கள். மூன்றே மாதங்களில் களமிறங்கி விட்டேன். கிராமங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றார்கள். ஆனால், நாங்கள் கிராமத்தில் இருந்து தான் தொடங்கினோம். எங்களுக்கு நல்ல யோசனைகள் கொடுப்பதே எங்களின் விரோதிகள் தான். அவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த யோசனையே வந்திருக்காது.

அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட உங்கள் ஆள்காட்டி விரலில் உள்ள  மை போதும். நாங்கள் தனித்து நிற்கிறோம். மற்றவர்களெல்லாம், சபரிமலைக்குச் செல்பவர்கள் யானைகளின் பயத்திற்காக ஒன்றாக குழுமி செல்வார்களே அப்படி கூட்டுச் சேர்ந்து  சென்று கொண்டிருக்கின்றனர். சேராத கூட்டமெல்லாம் சேர்ந்துவிட்டது. கூடிக் கலைவது கூட்டம்.ஆனால்  இது சங்கமம்.

தமிழக அரசியல் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என் வாழ்க்கை, என் தொழில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதில் வந்திருக்கிறேன். என்னை புகழின் உச்சியில் வைத்த மக்களுக்கு நான் செய்தது என்ன என நான் என்னைக் கேட்டுக்கொண்ட போது, குற்ற உணர்வுதான் மிஞ்சியது. அதனால்தான்  தாமதமானாலும் பரவாயில்லை என, மக்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்” என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார் கமல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!