காமெடி நடிகர் விவேக்கை விடாமல் துரத்தும் டி.டி.வி.தினகரன்...’அவர் வந்தே தீருவாராம்’...

Published : Apr 01, 2019, 12:15 PM IST
காமெடி நடிகர் விவேக்கை விடாமல் துரத்தும் டி.டி.வி.தினகரன்...’அவர் வந்தே தீருவாராம்’...

சுருக்கம்

“நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. பொதுமக்களில் ஒருவன்” என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விளக்கம் அளித்தபிறகும் அவர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு ஆதரவாக கண்டிப்பாக இறுதி மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று தினகரன் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

“நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. பொதுமக்களில் ஒருவன்” என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விளக்கம் அளித்தபிறகும் அவர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு ஆதரவாக கண்டிப்பாக இறுதி மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று தினகரன் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வழக்கம்போல் இல்லாமல் இம்முறை மிகக் குறைவான நடிகர்களே தேர்தல் களத்தில் உள்ளனர். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அ.ம.மு.க.) நடிகர் விவேக் இணைந்துவிட்டார் என்றும், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று நடிகர் விவேக் மறுத்தார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...”நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் விவேக் ட்விட்டர் பதிவைப் பொருட்படுத்தாத அ.ம.ம.க.வினர் இன்னும் இரு வாரங்களில் கண்டிப்பாக நடிகர் விவேக் எங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார். அதற்கான காரணத்தை விவேக்கே தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுக் களம் இறங்குவார் என்கிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!