
சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ‘உயர்ந்த மனிதன்’தமிழ்ப் படப்பிடிப்பில் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு நடிக்கத்துவங்கினார். அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார்.
அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் எஸ்.ஜே.சூர்யா வெற்றிபெற்றார். அவர் சொன்ன ‘உயர்ந்த மனிதன்’ கதையை வெகுவாக ரசித்த அமிதாப் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதை ஒட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினியின் கையால் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களாக நடந்துவருகிறது. வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, சிகப்புத்துண்டு விபூதி, குங்குமம் என கிட்டத்தட்ட ஒரு சாமியார் போன்றே அமிதாப் காட்சி அளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளரும் அவரது நெருங்கிய நண்பருமான தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.