அரசியலில் நடிகர் விவேக் களமிறங்குகிறார்..? இதுபற்றி அவரே வெளியிட்டுள்ள தகவல்..!

Published : Apr 01, 2019, 06:28 AM IST
அரசியலில் நடிகர் விவேக் களமிறங்குகிறார்..? இதுபற்றி அவரே வெளியிட்டுள்ள தகவல்..!

சுருக்கம்

அரசியலில் ஈடுபடபோவதாக வெளியாகும் தகவல்களுக்கு ட்விட்டர் மூலம் நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார். 

‘பசுமை கலாம்’ என்ற பெயரில் தமிழகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுவருபவர் நடிகர் விவேக். அரசியல் தொடர்பாக பட்டும் படாமல் கருத்து தெரிவிப்பதும் விவேக்கின் வாடிக்கை. தியேட்டர்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துவருகிறார். தற்போது தேர்தல் காலம் என்பதால்,  நடிகர் விவேக் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற தகவல் பரவிவருகிறது. 
அப்படி பரவும் செய்தி உண்மையில்லை என்றும், அது வதந்தி என்றும் நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்தக் கட்சியிலும் அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதைச் செவ்வனே செய்வேன். அனைத்துக் கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 
சமூகம் சார்ந்து அவ்வப்போது கருத்து தெரிவித்துவரும்  நடிகர் விவேக், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!