தேர்தல் நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பட அறிவிப்பை வெளியிடும் ராம்கோபால் வர்மா...

Published : Apr 01, 2019, 11:06 AM IST
தேர்தல் நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பட அறிவிப்பை வெளியிடும் ராம்கோபால் வர்மா...

சுருக்கம்

பிரபலமானவர்களின் வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை திரைப்படமாக எடுத்து புகழ் பெற்றவர் ராம்கோபால் வர்மா. பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை திரைப்படமாக எடுப்பதில் கெட்டிக்காரர். தற்போது மன்னார்குடி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பதுபோல் ஒரு பகீர் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவரான உத்தவ் தாக்கரேவை மையமாக வைத்து ராம் கோபால் வர்மா எடுத்த ’சர்க்கார்’ திரைப்படம் மிகவும் பிரபலம். இதேபோல் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்டி ராமராவின் நெகடிவ் சமாச்சாரங்களை மய்யமாக வைத்து ‘லெட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இதுவரை இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் எடுத்து வம்புகளை வளர்த்து வந்த   ராம்கோபால் வர்மா இந்த முறை நேரடியாக ஒரு தமிழ் படம் இயக்க உள்ளார். அதுவும் ஜெயலலிதா மற்றும் சசிகலா இடையிலான உறவை மையமாக வைத்து எடுக்கப் போவதாக துணிச்சலாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தத் திரைப்படத்திற்கு 'சசிகலா’ என்ற பெயரும் சூட்டி உள்ளார் வர்மா. இப்படத்தில் ஜெயலலிதாவை அப்பாவியாகவும் சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் அவரை எப்படி அரசியல் ரீதியாக குற்றவாளியாக்கினார்கள் என்று கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

’ஈவு இரக்கமற்ற மனிதர்களின் அந்தரங்க நட்பு, மற்றும் மன்னார்குடி கும்பல்’என்று இப்படம்  குறித்து விளம்பரத்தில் அறிவித்துள்ள ராம்கோபால் வர்மா இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!