ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம்...கியூவில் நின்று வாக்களிக்காமல் அப் செட் ஆன அஜீத்...

By Muthurama LingamFirst Published Apr 18, 2019, 9:45 AM IST
Highlights

திருவான்மியூரில் நடிகர் அஜீத் வாக்களிக்க வந்ததை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினரின் அத்துமீறலால் அவரால் கியூவில் நின்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டத்தை அவசரமாகக் கலைப்பதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் அவரை உடனே வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.
 

திருவான்மியூரில் நடிகர் அஜீத் வாக்களிக்க வந்ததை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினரின் அத்துமீறலால் அவரால் கியூவில் நின்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டத்தை அவசரமாகக் கலைப்பதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் அவரை உடனே வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.

தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க காலை 7 மணிக்கே வந்திருந்தார். அவர் குறிப்பிட்ட பூத்தில்தான் வாக்களிக்கவிருக்கிறார் என்று நேற்றே இணையங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் 6 மணியிலிருந்தே அவரை காண்பதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்தது. அடுத்து அவர்  வாக்களிக்க அங்கு வந்திருந்ததை அறிந்து ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.

நிலைமை அத்துமீறிப்போவதை உணர்ந்த காவல்துறையினரும் தேர்தல் பொறுப்பாளர்களும் அஜீத்தையும் அவரது மனைவி ஷாலினியையும் கியூவிலிருந்து வெளியேற்றி உடனே வாக்களிக்க ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

click me!