தாடி பாலாஜியை திஹார் ஜெயிலில் அடைக்க எம்.பி. தேர்தலில் போட்டியிடும் அவரது மனைவி நித்யா...

Published : Apr 18, 2019, 09:18 AM IST
தாடி பாலாஜியை திஹார் ஜெயிலில் அடைக்க எம்.பி. தேர்தலில் போட்டியிடும் அவரது மனைவி நித்யா...

சுருக்கம்

பதவியும் அதிகாரமும் கைக்கு வந்தால்தான் தன் கணவருக்கு சரியான பாடம் புகட்ட முடியும் என்று நினைத்தோ என்னவோ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

பதவியும் அதிகாரமும் கைக்கு வந்தால்தான் தன் கணவருக்கு சரியான பாடம் புகட்ட முடியும் என்று நினைத்தோ என்னவோ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

சமீபத்தில் அதிகம் அடித்துக்கொண்ட கணவன் மனைவி பட்டியலில் முக்கிய இடம்பிடித்தவர்கள் ‘பிக் பாஸ்’ புகழ் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும். ஒருவரை ஒருவர் அவதூறு செய்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்ததும், கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுப்பதுமாக இவர்களது சண்டை நீண்டுகொண்டே சென்றது.

இந்நிலையில் நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ‘தேசிய பெண்கள் கட்சி’ யில் இணைந்தார். 'இந்தாங்க லீடர் போஸ்ட்’ என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார். இது குறித்து நித்யா கூறியதாவது:-

‘முதலில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.டெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து ‘அவள் எல்லாம் கட்சித் தலைவியா’ என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள்.

வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும்.’’என்கிறார் நித்யா. தேர்தலில் நித்யா ஒருவேளை வென்றால் தாடி பாலாஜிக்கு திஹார் ஜெயில்தான்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்