* தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கவர்ச்சி சீன் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா என்று தான் முதலில் கேட்கிறாராம் நடிகை.
* தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கவர்ச்சி சீன் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா என்று தான் முதலில் கேட்கிறாராம் நடிகை.
இருக்கிறது என்று சொன்னால் உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இல்லை என்று சொன்னால், நான் சொல்லுகிற காட்சி எல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கவர்ச்சி விருந்து வைக்க வற்புறுத்துகிறார் 'ஓ' நடிகை. இவர் சொல்லுவதை பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்களாம் இயக்குனர்கள்.
* நான்கு எழுத்து நடிகை திரையுலகிற்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, இன்னும் சலைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசா புது திட்டங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை கூட குறைத்து கொள்ள தயாராகிவிட்டார். இந்த நிலையில் அவருக்கு பெற்றோர் திருமண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். படவாய்ப்புகள் வராவிட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம் அந்த நடிகை.
* தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. அதனால் பேய் படங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் மற்றும் வேண்டாம் என மறுக்கிறார். அந்த நாயகி கேரளாவைச் சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். இதனால் இரண்டு பட வாய்ப்பை கூட மறுத்துவிட்டாராம்.