‘வலிமை’ பட தியேட்டர் உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்... லேட்டஸ்ட் அப்டேட் இதோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 29, 2021, 08:55 PM ISTUpdated : Mar 30, 2021, 09:46 AM IST
‘வலிமை’ பட தியேட்டர் உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்... லேட்டஸ்ட் அப்டேட் இதோ...!

சுருக்கம்

தல அஜித்தின் வலிமை பட தியேட்டர் ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.  

தல ரசிகர்கள், வலிமை அப்டேட்டிற்காக  செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது,  பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார்.


அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர்,   அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். தல பிறந்தநாளில் டபுள் ட்ரீட் கிடைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு ஸ்பெஷல் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித்தின் வலிமை பட தியேட்டர் ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அஜித் பட வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு  கோடிகளைக் கொட்டிக்கொடுத்து வலிமை தியேட்டர் ரிலீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?