வருத்தம் தெரிவித்த ஆர்யா! 'அவன் - இவன்' பட வழக்கில் அதிரடி திருப்பம்!

Published : Mar 29, 2021, 04:58 PM IST
வருத்தம் தெரிவித்த ஆர்யா! 'அவன் - இவன்' பட வழக்கில் அதிரடி திருப்பம்!

சுருக்கம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தின் பிரச்சனைக்காக, இன்று காலை நடிகர் ஆர்யா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், ஆர்யா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தின் பிரச்சனைக்காக, இன்று காலை நடிகர் ஆர்யா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், ஆர்யா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படம் 'அவன் - இவன்'. ஆர்யா விஷால் இணைந்து நடித்த, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. காதல், காமெடி,ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தையும் அளவான கலவையில் கொடுத்து ரசிகர்களை ரசிக்கவைத்திருந்தார் பாலா.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் இயக்குனர் பாலா அவதூறாக சித்தரித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இந்த படத்தின் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.  இயக்குனர் பாலா, தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஆர்யா, விஷால், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு குறித்து ஏற்கனவே இயக்குனர் பாலா ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்த நிலையில், இன்று நடிகர் ஆர்யா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ஆர்யா தன்னுடைய தரப்பில் இருந்து, 'அவன் இவன்' படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக போடப்பட்ட வழக்கில் வருத்தத்தை தெரிவித்த நிலையில், அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!