ஈகோவால் வேண்டாம் என கூறிய முன்னாள் கணவர்..! இறந்ததால் பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத நடிகை!

Published : Mar 29, 2021, 04:40 PM IST
ஈகோவால் வேண்டாம் என கூறிய முன்னாள் கணவர்..! இறந்ததால் பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத நடிகை!

சுருக்கம்

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகையின் முன்னாள் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததை அறிந்து அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகையின் முன்னாள் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததை அறிந்து அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியே முடிந்துவிட்ட நிலையில் மலையாளத்தில் தற்போது தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவராக, தற்போது பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட்டும், குணச்சித்திர நடிகையுமான பாக்கியலட்சுமி என்பவர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இவர் தன்னுடைய பத்து வயதிலிருந்தே டப்பிங் ஆர்டிஸ்டாக திரையுலகில் வலம் வருகிறார். மேலும் 80 பது, மற்றும் 90 களில், முன்னணி நடிகையாக இருந்த மேகனா, நதியா, அமலா, ரம்யா கிருஷ்ணா, போன்ற நடிகைகளுக்கும் பின்னர் ஜோதிகா நயன்தாரா, போன்ற முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் கொடுத்தவர். இதற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தவர்.

இந்நிலையில் இவரை பிக் பாஸ் திடீர் என கன்ஃபெஷன் அறைக்கு வரச் சொல்லி பேரதிர்ச்சி கொடுத்தார். அதாவது அவரது முன்னாள் கணவர் இறந்து விட்டதாக பிக்பாஸ் கூறினார். மேலும் அழுது கொண்டே வெளியே வந்த  பாக்கிய லட்சுமியை சக போட்டியாளர்கள் என்ன நடந்தது என விசாரித்த போது, தன்னுடைய முன்னாள் கணவர் இறந்து விட்டதாக கூறி கதறி அழுதார். பின்னர் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும் சில சங்கடங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என தன்னுடைய மனக்குறையை மற்ற போட்டியாளர்கள் இடம் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் இவருக்கு மகன்களிடம் பேச பிக் பாஸ் சிறப்பு அனுமதி கொடுத்தார்.  மேலும் இந்த சம்பவம் இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய முன்னாள் கணவருக்கு நீண்ட காலமாகவே சிறுநீரக பிரச்சினை இருந்து வந்த நிலையில் அவருக்கு நான் என்னுடைய சிறுநீரகத்தை கொடுப்பதாக கூறியும் அவர் ஈகோ காரணமாக அதனை வாங்க மறுத்துவிட்டார். என அழுதார் இந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போட்டியாளர்களை மட்டும் இன்றி, மலையாள பிக்பாஸ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!