புல்லட் பாண்டியாக அஜித்! விஸ்வாசம் படத்தின் லேட்டஸ் அப்டேட்!

By manimegalai aFirst Published Sep 30, 2018, 11:07 AM IST
Highlights

விசுவாசம் படத்தில் நடிக்கும் தல அஜித், அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் புல்லட் பைக்கில் வந்து மாஸ் காட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

விசுவாசம் படத்தில் நடிக்கும் தல அஜித், அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் புல்லட் பைக்கில் வந்து மாஸ் காட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா – தல அஜித் கூட்டணியில் தயாராகிவரும் விசுவாசம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்தப் படத்தில் தன் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் காட்சியளிக்கும் தல அஜித், வீரம் படத்தை போலவே, வேட்டி-சட்டையில் வந்து கலக்கும் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது சால்ட் அன்ட் பெப்பர் லுக், வேஷ்டி-சட்டை, பெரிய மீசை ஆகியவற்றுடன் விசுவாசம் படத்தில் மாஸ் காட்டும் தல அஜித், பெரும்பாலான காட்சிகளில் புல்லட் பைக்கிலேயே வருகிறாராம். சாதாரணமாகவே, படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக காணப்படும் தல அஜித், புல்லட் பைக்கை எடுத்தவுடன், அவரது உற்சாகம் இரட்டிப்பாகி விடுவதாக, படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சில பேசிக் கொள்கின்றனர்.

ஜான் சேனா, ராக், அண்டர் டேக்கர் போன்றவர்கள் போடும் மேற்கத்திய பாணி சண்டையை போல, தல அஜித்தும் கூண்டுக்குள் நின்று எதிரிகளுடன் மோதுவது போன்ற புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிய நிலையில், புல்லட் பைக்கில் பெரும்பாலான காட்சிகளில் வரும் தகவலும் தற்போது கசிந்துள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களுக்கு அது விருந்தாகவே அமைந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விசுவாசம் திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் சங்கரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடன் யோகிபாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, விவேக், கோவை சரளா உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

click me!