
தல செய்த காரியத்தை பார்த்தீங்களா...? இப்படி செய்துட்டாரே....
நடிகர் அஜித் பற்றி எப்போதுமே ஒரு நல்ல செய்தியை கேள்விபட்டுட்டே இருப்போம்.. அதற்கு காரணம் அவருடைய நேர்மை தான் ...
தன் வீட்டில் வேலை செய்து வருபவர்களை கூட தன் குடும்ப உறுப்பினர்களாக நடத்துபவர் அஜித். இந்நிலையில் இவருடைய மேக்அப்மேனை பணியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
காரணம் தெரியுமா ?
தன்னிடம் வேலை பார்த்து வந்த மேக்அப் மேன் தனக்கே தெரியாமல், தயாரிப்பாளரிடமிருந்து அதிக சம்பளம் கேட்டு வாங்கி உள்ளாராம். இந்த தகவல் தற்போது தான் தல அஜித்க்கு தெரியவர உடனடியாக அவரை பணியிலிருந்து நீக்கிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
நடிகர் அஜித்,தன்னுடைய நடிப்பால் பிரபலம் அடைந்ததை விட அவருடைய நல்ல குணத்தாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் பெரிய மனம் படைத்தவராக இருப்பதாலேயே மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்
சமீபத்தில் கூட யாருக்கும் தெரியாமல் ஆயிரகணக்கான ஏழை மக்களின் கண் சிகிச்சைக்காக ஒரு மருத்துவரின் மூலம் பணம் கொடுத்து உதவியது ராதா ரவி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது நாம் அறிந்த ஒன்றே....
இந்நிலையில் தன்னுடன் இருந்துகொண்டே இது போன்ற துரோக செயல்களில் ஈடுபட்ட மேக்கப்மேனை அஜித் அதிரடியாக நீக்கி உள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....
அவருடைய நேர்மையே....மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.