ஸீனுக்கு ஸீன் அதிரடி காட்சிகள் மூலம் அதகளம் செய்யும் அஜித்! கடைசி 10 நிமிடங்கள் கல் நெஞ்சத்தையும் கலங்க வைக்கும் தல

By sathish kFirst Published Jan 10, 2019, 12:12 PM IST
Highlights

வீரம் வேதாளம் விவேகம் மூன்றுமே மாஸ் எலிமெண்ட்ஸ் உள்ள நல்ல படங்கள் தான்.. ஆனாலும் ஏதோ ஒன்று குறையும்.. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் சிவா.   

சுமார் 500 நாட்களுக்குப்பின் தல அஜித்தை திரையில் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஃபுள் ட்ரீட் கொடுத்துள்ளார் அஜித். காலை முதலே திரை அரங்குகளில் அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

"மூவேந்தர்" படத்தில் வரும் சரத்குமாரைப்போல அடாவடி அலப்பறை செய்து கொண்டிருக்கும் மைனர் அஜித். வெள்ளை சட்டை, வேட்டி, பச்சைநிற ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ், வெண்நிற தலைமுடி, மீசை, தாடியுடன் காட்சியளிக்கிறார் தூக்குதுரையாக மரணமாஸ்க்கு உண்டான பேக்கேஜ். 

நயன்தாரா கிராமத்து மெடிக்கல் கேம்ப்பில் காலந்துகொள்ள வருகிறார். அஜித்தும் நயன் தாராவும் காதலில் விழுந்து, திருமணம் முடிக்கின்றனர். அடிக்கடி கிராமத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்டு பிரச்னைகளில் சிக்குகிறார். அஜித்துடன் இருந்தால் குழந்தைக்கும் தமக்கும் பாதுகாப்பில்லை என உணர்ந்த நயன்தாரா குழந்தையுடன் மும்பை செல்கிறார். 10 வருடங்கள் மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்கிறார் அஜித். குடும்பத்தினரின் அறிவுரையின்பேரில் மனைவி, மகளை ஊருக்கு அழைத்து வர மும்பை செல்கிறார். அங்கு அவரது மகளை கொல்லத்துடிக்கும் பிசினஸ் மேன் ஜகபதி பாபுவிடம் இருந்து மகளை எவ்வாறு காக்கிறார் என்பதே கதை.  மாஸான ஆக்ஷன் படம் தான் என்றாலும் எமோஷனல் செம்மயா வொர்க்அவுட் ஆகியிருக்கிறது.  ஆனால் அஜித்தின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் மாஸுக்கு இந்தக் கதையே போதுமானது என எண்ணியுள்ளார் இயக்குநர் சிவா. 

ஸீனுக்கு ஸீன் அதிரடி காட்சிகள் மூலம் அதகளம் செய்யும் அஜித். அங்கிதா, விவேக், தம்பி ராமைய்யா, ரோபா ஷங்கர் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களுக்கு   முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது சிவாவின் சிறப்பு என்றே சொல்லலாம். 

படம் கடைசி 10 நிமிடங்கள் கல்நெஞ்சம் கொண்டவர்கள் கண்களிலும் கண்ணீர் Automatic கா வரவழைத்து விடுக்கிறார் தல அஜித். விஸ்வாசம் பெர்பெக்ட் பேக்கேஜ். அனைவருக்கும் சிறப்பான பொங்கல் விருந்து. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், மாஸ் காம்போ என ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான சம்பவம், அஜித் நடித்த படங்களில் இது பெஸ்ட்!

"நம்மளோட கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் குழந்தைங்கவமேல திணிக்காதிங்க!
அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும் அவங்கள சந்தோமா விடுங்க" END கருத்து செம்ம!
 

click me!