ரஜினியை அடிச்சுத் தூக்கிய அஜித்..! பேட்டயை விட ஆல் ரவுண்டு மாஸ் காட்டும் விஸ்வாசம்!

By Vishnu PriyaFirst Published Jan 10, 2019, 11:00 AM IST
Highlights

செம்ம கூராக கொம்பு சீவப்பட்டு, வழுவழுவென எண்ணெய் தடவப்பட்டு, மூர்க்கத்தனமாக முறுக்கேற்றிவிட்டதால் தலையை சிலுப்பி உலுக்கி, வெறித்தனமான வேகத்துடன் களத்தில் பாயும் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல் ரிலீஸாகி முட்டி மோதி நிற்கின்றன அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும். 

செம்ம கூராக கொம்பு சீவப்பட்டு, வழுவழுவென எண்ணெய் தடவப்பட்டு, மூர்க்கத்தனமாக முறுக்கேற்றிவிட்டதால் தலையை சிலுப்பி உலுக்கி, வெறித்தனமான வேகத்துடன் களத்தில் பாயும் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல் ரிலீஸாகி முட்டி மோதி நிற்கின்றன அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும். 

ரஜினிக்கு அவரது ‘தலைவன், சூப்பர் ஸ்டார்’ எனும் மெகா பிம்பம் கைகொடுத்தது. அது போக பேட்ட படத்தில் மல்ட்டி ஸ்டார்ஸ் நடித்திருந்ததும், ரஜினியின் வெறித்தனமான ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேம் செதுக்கி இருந்தார், இது போக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது கையிலிருக்கும் விஷூவல், ரேடியோ மற்றுறும் பேப்பர் என அத்தனை வகை மீடியாவிலும் இந்தப் படட்தை பெரிய அளவில் ப்ரமோட் செய்தது. படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆகின. ரஜினியின் பழைய ஸ்டைல் இந்தப் படத்தில் மீண்டும் வந்து நின்றது.

 

ஆனால், அஜித் படத்துக்கு இப்படி எதுவுமே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித்தை விரும்பும் அவரது ரசிகர்களே வெறுத்த இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்த படம் இது. தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ்  ‘விவேகம்’ நஷ்டத்தின் காரணமாக எண்ணியெண்ணி செலவு செய்தது, பெரிதாய் எதிர்பார்க்கப்பட்ட டி.இமானின் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. விளம்பரங்களும் அதிகம் இல்லாத நிலையில் ‘தல’ எனும் ஒற்றை மந்திரச் சொல் மட்டுமே விஸ்வாசம் படத்துக்கு எல்லாமுமாக அமைந்தது. 

இன்று இரு படங்களும் அதிகாலையிலேயே ரிலீஸாகிவிட்டன. துவக்க கட்ட கணிப்பின் படி, வசூல் மற்றும் மாஸ் இரண்டிலும் பேட்ட படத்தை விஸ்வாசம்  ஓவர்டேக் பண்ணி அடிச்சு தூக்கிடுச்சு என்கிறார்கள்!  பேட்ட படம் வழக்கமான ரஜினி டைப் ‘பழிவாங்கல்’ கதைதான்.  முதல் பாதி பரபரவென பட்டையை கிளப்ப, இரண்டாம் பாதி சற்றே தடுமாறுகிறதாம். ஆனால் படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை ஸ்டைல் ரஜினியை இதில் பார்க்க முடிவதால் ரஜினி ரசிகர்கள் செம்ம கூல். விஸ்வாசத்தை ‘மெகா ஹிட்’ என்கிறார்கள் அவரது ரசிகர்களை கடந்த பொது ரசிகர்கள். சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா காம்போவாக உருவாகி இருக்கிறது, சிவாவுடன் ஜெயித்தே ஆக வேண்டும் எனும் வெறியில் அஜித் பின்னிப் பேர்த்தெடுத்திருக்கிறார்.

 

தகவல்கள் இப்படி வந்து கொண்டிருக்கும் சூழலில்... திரைப்படங்களின் ரிலீஸ், வசூல், வெற்றி போன்றவற்றை அலசி, ஆராய்ந்து, கணிக்கும் ராமானுஜம் “ரஜினி படத்துக்கு ரெஸ்பான்ஸ் உண்டுதான், ஆனால் அஜித்குமாரோ ‘தல’யாக விஸ்வரூபமெடுத்த பிறகு அவரது ஓப்பனிங் வின்னர். ரஜினி, விஜய்க்கு ஓப்பனிங் கலகலன்னு இருக்கும்தான் ஆனால் படம் நல்லா இருந்தால் மட்டுமே அந்த வைபரேஷன் நீடிக்கும். ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் படம் எப்படி இருந்தாலும் சரி ஓப்பனிங் பெரிய மாஸாக இருக்கும். படம் நல்லா இருந்துட்டால் தாறுமாறாக பிய்ச்சுக்கிட்டு போகும். காரணம் அவரோட ரசிகர்கள் கண்மூடித்தனமாக அவர் மேலே வெச்சிருக்கிற அன்புதான். 

அஜித் படமென்பதால் விஸ்வாசத்தை சில மாதங்களுக்கு முன்பேயே ‘அவுட் ரேட்’ முறையில் மொத்தமாக பணம் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியிருந்தனர். விவேகம் படத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை அழைத்து கொடுத்துள்ளனர் இந்த படத்தை, அந்தளவுக்கு படத்தின் மேக்கிங்கில் நம்பிக்கை எப்போதோ வந்துவிட்டது. நினைத்தது போலவே அடிதூள் பின்னுது படம். பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, அதை ரெட்ஜெயண்ட் மூவிஸுக்கு ‘டிஸ்ட்ரிபியூஸன்’ கொடுத்துவிட்டது. அவர்கள் பார்த்துப் பார்த்து கவனமாக பிஸ்னஸ் செய்திருக்கிறார்கள்!” என்கிறார்.

 

தியேட்டர் சைடு என்ன சொல்றாங்க?...ன்னு பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள சுமார் ஆயிரத்து நூற்றைம்பது தியேட்டர்களில் எண்ணூறு தியேட்டர்களில் இந்த இரு படங்களும் ரிலீஸாம். சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டில் பேட்டயை விட பதினாறு தியேட்டர்கள் அதிகமாக விஸ்வாசம் ரிலீஸாகி இருக்குது. ஒட்டு மொத்தமா பார்க்குறப்ப தலதான் எல்லா விதத்திலும் மாஸ் காட்ட துவங்கியிருக்கிறாராம். தல!டா.

click me!