’நேர்கொண்ட பார்வை’ படு மந்தமான ரிசர்வேசன்...ஆடிப்போயிருக்கும் அஜீத் வட்டாரம்...

By Muthurama LingamFirst Published Aug 5, 2019, 4:00 PM IST
Highlights

ஓவர் பில்ட் அப் ஒடம்புக்கு ஆகாது என்று சொல்வார்களே அது இப்போது அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வைக்கு நடந்துகொண்டிருக்கிறது. வழக்கமாக மூன்று தினங்களுக்கு முன்புதான் ரிசர்வேசன் துவங்கப்படும் என்கிற நிலையில் ஆறு நாட்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இப்படத்தின் ஓப்பனிங் களைகட்டாமல் காத்தாடிக்கொண்டிருக்கிறது.

ரீ மேக் படம் என்பதாலோ என்னவோ விஸ்வாசம் படத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விநியோகஸ்தர்களோ தியேட்டர் அதிபர்களோ இப்படத்துக்குக் கொடுக்கவில்லை. இப்படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமை 70 கோடியை எட்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் எதிர்பார்த்திருந்த நிலையில், மொத்த வியாபாரம் 45 கோடியை மட்டுமே தொட்டது. அடுத்து படத்தின் முதல் மூன்று நாள் வசூலையாவது அள்ளிவிடவேண்டும் என்ற நப்பாசையில் 8ம் தேதி வெளியாகவிருக்கும் படத்துக்கு 2ம் தேதி முதலே ரிசர்வேஷனைத் தொடங்கினார்கள். ஆனால் அந்த முயற்சியும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது. இன்றைய மதிய நிலவரம் வரை சென்னையில் கால்வாசிக் காட்சிகள் கூட ஹவுஸ்ஃபுல் காட்டவில்லை.

இது குறித்து தியேட்டர் அதிபர் ஒருவரிடம் பேசியபோது, இந்தி ரீ மேக் என்பது இப்படத்துக்கு மிகப்பெரிய மைனஸ். அஜீத் ரசிகர்களில் பாதிப்பேருக்குப் படத்தின் கதை தெரியும் என்பதால் அவர் பாதிப்படத்தில்தான் தோன்றுவார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அடுத்தபடியாக படத்தின் ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள  கற்பு தொடர்பான சில கரடுமுரடான வார்த்தைகளால் பெண்கள் இப்படம் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்.

click me!