கீழே விழுந்து அழுத அபிராமி! முகேன் விட்ட ஒரே குத்தில் உடைந்து சிதறிய கட்டில்!

Published : Aug 05, 2019, 01:01 PM ISTUpdated : Aug 05, 2019, 01:03 PM IST
கீழே விழுந்து அழுத அபிராமி! முகேன் விட்ட ஒரே குத்தில் உடைந்து சிதறிய கட்டில்!

சுருக்கம்

சாக்ஷி முகேனிடம் பேசுவது, தற்போது அபிராமிக்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது முதல் ப்ரோமோ மூலம் வெளிப்பட்டது. சாக்ஷி தானாக வந்து, நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா பேபி என கேட்டபோது கூட, கோவத்தில் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்து, தன்னுடைய மனதில் உள்ள கஷ்டத்தை லாஸ்லியாவிடம் கொட்டி தீர்த்தார்.

இதை தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு முன் இரண்டாவது ப்ரோமோ வெளியானது. அதில் அபிராமி தன்னுடைய காட் அருகே கீழே விழுந்து அழுகிறார். அவருக்கு என்ன ஆனது என பதறி போன, தர்ஷன் என்ன ஆனது என வந்து கேட்கிறார். 

பின் முகேன் அபிராமி அருகே அமர்ந்து என்ன பிரச்சனை என கேட்க, தனக்கு அங்கு அமர பிடிக்கவில்லை அதனால் எழுந்து வந்துவிட்டதாக அபி கூறுகிறார். எனக்கும் அவங்களுக்கும் உள்ள நட்பில் சில நாட்களாகவே விரிசல் இருந்து வந்தது. எனவே இதுகுறித்து அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தேவையில்லை என்பது போல் கூறுகிறார்.

டென்ஷன் ஆன முகேன், எப்படி எழுந்து வந்த, என இருமுறை அபிராமியை பார்த்து கேட்டு விட்டு கோபத்தில் தான் அமர்ந்திருக்கும் கட்டிலில் வேகமாக குத்துகிறார் இதில் கட்டில், உடைவது சிரத்தியது காட்டப்படுகிறது. 

அபிராமி எழுந்து வந்தது, இன்னும் பெரிய பிரச்சனையாக வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுவரை சாக்ஷி, லாஸ்லியா, கவின் பற்றிய பிரச்சனைகளே பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் இன்று அபிராமி - முகேன் பிரச்சனை எழுந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்