
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அது போல் தான் நேற்றைய தினம், யாரும் எதிர்பாராத ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள், வந்த நாள் முதல் இணை பிரியாமல் இருந்து வந்த சாக்ஷி, அபிராமி மனதை கஷ்டப்படுத்தி அழ வைக்கிறார்.
இன்றைய முதல் ப்ரமோவில் "சாக்ஷி அபிராமியை பார்த்து, ஏன் பேபி நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என கேட்கிறார். இதற்கு ஏதோ அபி கூற, அதற்கு சாக்ஷி அவனை மறந்து விடுவேன் என கூற அங்கிருந்து ஆவேசமாக எழுந்து செல்கிறார் அபிராமி.
பின், அபிராமி அழுது கொண்டே... நான் அவ்வளவு பேசிட்டு வந்துருக்கேன்... நான் அங்கிருந்து வரும் போது கூட யாரும் வரைகூட இல்லை. அவங்களுக்கு எப்போதுமே அவங்க ரைட், அவங்களுக்கு பிரச்சனை, அவங்க தான் ஹட் ஆகி இருக்காங்க, அவங்களுக்கு தான் மனசு என அழுகிறார். பின் இதெல்லாம் தெரிஞ்சும் முகேன் இப்படி அமர்ந்திருப்பது தான் இன்னும் வேதனையாக உள்ளது என கூறுகிறார். இதற்கு லாஸ்லியா அவரை சமாதானம் செய்கிறார்.
இந்த ப்ரோமோவில் இருந்து, இத்தனை நாள் அபிக்கு மட்டுமே சப்போர்ட் செய்து கொண்டிருந்த முகேன், தற்போது சாக்ஷி பக்கம் திரும்பியுள்ளது. அபிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது. வரும் வாரங்களில் என்ன நிகழும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.