
நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரியும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒட்டு மொத்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்ட மௌன அறவழி போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், கமல், ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இது சமூக அக்கறையோடு நடத்தப்படும் மௌன அறவழி போராட்டம் என்பதால், இந்த போராட்டத்தில் கண்டிப்பாக அஜித் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அஜித், ரசிகர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தப்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகே பெருவாரியாக குவிந்தனர். இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடும் வெய்யிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த இவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே.... காலை 9 மணிக்கு துவங்கப்பட்ட இந்த போராட்டம் முடியும் வரை பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் மட்டும் வரவே இல்லை.
மேலும் எப்போதும் அஜித் ரசிகர்களை உசுப்பேற்றி சண்டை வாங்கும் விஜய் ரசிகர்கள்... சமூக வலைத்தளத்தில் 'விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் விஜய் தான் முதல் ஆளாக போராட்டத்திற்கு வந்தார்' என கூறி வருகின்றனர். அஜித் ரசிகர்களை மிகவும் கோவமாக்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.