
நேற்றயதினம் நடிகர் அதர்வா, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில், அவரை தொடர்ந்து, அஜித் பட நடிகை ஒருவரும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாளில் வருகிற 25ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை தொடர்ந்து, மும்பை, மஹாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. சாதாரண மக்களையும் கடந்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து, மக்கள் மிகவும் பாதிக்கப்பாகவும், வெளியே செல்லும் போது, காரோண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துவருகிறார்கள்.
தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சமீரா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அஜீத் நடித்த 'அசல்' சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட சில தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு முழுமையாக இவர் விலகினாலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடவுள் ஆசீர்வாதத்தால், தனது குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள சமீரா ரெட்டி, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அனைவரும் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.