விவேக் மரணம் தொடர்பாக தவறான செய்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை..! சென்னை மாநகர ஆணையர் எச்சரிக்கை!

By manimegalai aFirst Published Apr 18, 2021, 12:51 PM IST
Highlights

மறைப்பு காரணமாக நேற்று முன் தினம் காலை 11 மணியளவில், சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, விவேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4 :35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மரணம் தற்போது வரை, பலராலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது.
 

மறைப்பு காரணமாக நேற்று முன் தினம் காலை 11 மணியளவில், சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, விவேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4 :35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மரணம் தற்போது வரை, பலராலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது.

காரணம், தன்னுடைய உடல் நலனில் அதிக அக்கறை கொண்டவர் விவேக். சாதாரண அரிப்பு வந்தால் கூட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்பவர். கண்டிப்பாக 3அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்பவர். ஷூட்டிங் இல்லாத நாட்களில் அதிகாலையிலேயே ECR சாலையில் சைக்கிளிங்கில் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பவர்.

இப்படி உடல் நிலையை பார்த்து... பார்த்து கவனித்து கொண்ட இவருக்கா? இந்த நிலை என விழி பிதுங்கி போய் உள்ளனர் விவேக்கை பற்றி நன்கு அறிந்தவர்கள். இப்படி பட்டவருக்கு எப்படி, 100 சதவீத அடைப்பு ஏற்படும் என்பதும் அவர்களது அவர்களது மிகப்பெரிய கேள்வி.

 

இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம்... நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் தான், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக, சிலர் வந்தந்திகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். ஏற்கனவே இதுகுறித்து, SIMS மருத்துவம் ராஜு சிவசாமி மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது, விவேக்கின் மாரடைப்பிற்கும், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அவர் எடுத்துக்கொண்டதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதையும் மீறி, சிலர் அவதூறு கருத்துக்களை பரப்பும் விதமாக, கொரோனா தடுப்பூசி இதயதயத்திற்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்துவிடுகிறது போன்ற தகவல்களை பரப்பிவருகிறார்கள். எனவே இதுபோல் உண்மையில்லாத தகவல்களை பரப்புபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்துள்ளார். 

click me!