பிரபல நடிகருக்கு கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Published : Apr 18, 2021, 11:59 AM IST
பிரபல நடிகருக்கு கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபல பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி  வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, நேற்றைய தினம் கூட பல ஏழை மக்களுக்கு உதவிகளை செய்து வரும்,  சோனு சூட்டுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,  அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து... பிரபல தமிழ் ஹீரோ அதர்வாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் அதர்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தென்பட்டதை அடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் என்னுடைய வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டேன். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் அடைவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!