
‘விஸ்வாஸம்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் குறித்து அதன் தயாரிப்பு நிர்வாகத்தையும், அஜீத்தின் மேனேஜரையும் ரசிகர்கள் நச்சரித்துவரும் செய்திகளை நேற்றே விலாவாரியாக வெளியிட்டிருந்தோம். அதற்கு ஆதாரமாக வெளியான ஆடியோ ஒன்று தற்போது வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.
அஜீத்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவுக்கு ரசிகர் ஒருவர் போன் செய்கிறார். துவக்கதிலேயே பொறுமையிழந்து அந்த காலை அட்டெண்ட் பண்ணும் சுரேஷ் சந்திரா எடுத்த எடுப்பிலேயே ‘நீ எதாவது ஏரியா டிஸ்ட்ரிபியூஷன் வாங்கியிருக்கியா? அப்புறம் உனக்கு எதுக்கு பட ரிலீஸைப்பத்தி அக்கறை?? என்று துவங்கி முழுக்க ஒருமையிலேயே அந்த ரசிகரை காய்ச்சி எடுக்கிறார். பதிலுக்கு கோபப்படும் ரசிகர் .’அவருக்காகத்தான் [அஜீத்] பாக்குறேன்.இல்லைன்னா’ என்றபடி போனை கட் செய்கிறார்.
அந்த உரையாடலை உடனே அந்த ரசிகர் யூடுபில் அப்லோட் செய்ய, அதை லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்து தொடர்ந்து ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள். விஷயம் சில நிமிடங்களிலேயே தல காதுக்கு எட்ட, ‘ சுரேஷ் நமக்கு தொழில்ல பொறுமைதான அவசியம். ஒண்ணு போன்ல பொறுமையா பதில் சொல்லுங்க. இல்லைன்னா ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க’ என்று கண்டித்து போனைத் துண்டித்துவிட்டாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.