ஸ்டைலிஷ் கூலிங்கிளாஸ், பிளாக் கலர் டிரஸில்.. செம்ம சிம்பிளாக ரசிகருடன் தல அஜித்... லேட்டஸ்ட் போட்டோ...!

Published : Jul 12, 2021, 07:20 PM ISTUpdated : Jul 12, 2021, 07:22 PM IST
ஸ்டைலிஷ் கூலிங்கிளாஸ், பிளாக் கலர் டிரஸில்..  செம்ம சிம்பிளாக ரசிகருடன் தல அஜித்... லேட்டஸ்ட் போட்டோ...!

சுருக்கம்

தல அஜித், மிகவும் எளிமையாக தன்னுடைய ரசிகருடன் எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

தல அஜித், மிகவும் எளிமையாக தன்னுடைய ரசிகருடன் எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தல அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான வலிமை திரைப்படத்தின் அப்டேட் நேற்று வெளியான மகிழ்ச்சியில் இருந்து இன்னும் பல ரசிகர்கள் மீளவில்லை. தற்போது வரை வலிமை மோஷன் போஸ்டர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த வருடத்தின் இறுதிக்குள்ளேயே படம் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்த ரசிகர்களையும் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இனிவரும் நாட்களில் வலிமை படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது 'தல' அஜித் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் பார்ப்பதற்கும் மிகவும் எளிமையாக பிளாக் கலர் ஷர்ட் மற்றும் பிளாக் ஜீன்ஸ் அணிந்து, செம்ம ஸ்டைலிஷாக கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். முன்பை விட பார்ப்பதற்கு உடல் மெலிந்தும் காணப்படுகிறார் அஜித்.

அஜித் குறித்து எந்த தகவல் வந்தாலும் அதனை வைரலாக்கும் ரசிகர்கள் இவருடைய, லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்தால் சும்மா இருப்பார்களா... வலிமை மோஷன் போஸ்டர் ஒரு பக்கம் வைரலாவது போல் இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அஜித் எப்போதுமே தன்னுடைய ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அதே நேரத்தில் ரசிகர்களை காண அதிகம் வெளியே வரமாட்டார் என்றாலும், அப்படி வெளியே வந்தால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசை படும் ரசிகர்கள் விருப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, நலம் விசாரித்து விட்டு தான் அந்த இடத்தில் இருந்து செல்வார்.

இந்த தகவல் இவரை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்... ஷூட்டிங் ஸ்பாட்டிலும், தன்னுடைய படக்குழுவினர் அனைவர் மீதும் அக்கறையோடு இருப்பது மட்டும் அல்லாமல் அதில், வேலை செய்பவர்கள் ஏதேனும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்றால் ஓடி சென்று உதவி செய்பவர். இதன் காரணமாக தான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Raashii Khanna : கிளாமர் உடையில் கலக்கும் ராஷி கன்னா!! செம்ம ஹாட் ஸ்டில்கள்..!!
ஜனவரி 23ந் தேதி தியேட்டர் மற்றும் OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ