
சில சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான, ஹிந்தி நடிகை தன்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அதற்க்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைக்கும் விதத்தில் உள்ளது.
நடிகை அனயா சோனி, அடலட், கிரைம் பேட்ரோல், நாம்கரன், உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், மாற்று சிறுநீரக சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இவர் பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது...
"கடந்த 6 வருடங்களுக்கு முன் என்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. பின்னர் தன்னுடைய தந்தை தான் அவரது ஒரு சிறுநீரகத்தை எனக்கு தானமாக கொடுத்தார். பின்னர் இந்த 6 வருடங்கள் ஒரு சிறுநீக்கத்துடன் தான் வாழ்த்து வந்தேன். தற்போது அந்த சிறுநீரகமும் செயலிழந்து வருகிறது. 2 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை டயாலிசிஸ் துவங்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயன்று வருகிறோம்.
ஆனால் அதற்கான போதிய பணமும் எங்களிடம் இல்லை. நன்கு வசதியாக தான் இருந்தோம். அம்மா துணி வியாபாரம் செய்து வந்தார் . சகோதரர்களும் நல்ல நிலையில் இருந்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தீ பற்றி எரிந்தது அதில் உடமைகள் அனைத்தையும் இழந்து விட்டோம். தற்போது கையில் இருந்த பணம் எல்லாம் மருத்துவ செலவுகளுக்கே தீர்ந்து விட்டது. எனவே தன்னைக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவ வேண்டும் என கூறியுள்ளார்.
நெஞ்சை உருக்கும் படி மருத்துவமனையில் இருந்து இவர் வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது இதை பார்த்து, பாலிவுட் பிரபலங்கள் உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது... இவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.