
பீஸ்ட் படம் ஒட்டிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜீத் ரசிகர்கள் திரைக்கு தீ வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடலுக்கு பலரும் ஆட்டம் போட்டனர். மேலும் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனைக் காண திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் குவிந்தனர். சில இடங்களில் டி.ஜே. பார்ட்டி வைத்து நடனமாடினர். பீஸ்ட் படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது. அதே சமயம் திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டன. ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான நேரம், இடம் ஆகியவை முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், மதுரை மேலூர் திரையரங்கில் பீஸ்ட் படம் ஓடிய திரைக்கு அஜீத் ரசிகர்கள் தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீஸ்ட் படத்தில் திரை தீ பிடிக்கும் என்ற தீம் பாடல் உள்ளது. அந்த வரிகளுக்கு ஏற்ப திரைக்கு நிஜமாகவே தீ வைத்துள்ளனர். படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தீவைக்கப்பட்டது. இதனை அஜீத் ரசிகர்கள் தான் செய்தார்கள் என கமெண்டில் விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் கொளுத்தியதாக அஜீத் ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளரிடம் கேட்டப்போது அவர்கள் எதும் கூறாமல் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.