
ராஜ்திருசெல்வன் என்ற என்.ஆர்.ஐ, 'லேக் ஆப் ஃபையர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த படத்தை இயக்கிய ராஜ்திருசெல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தான் இரண்டு வித்தியாசமான கதைகள் தயார் செய்து வைத்துள்ளதாக கூறினார்.
ஒன்று தமிழக அரசியல் குறித்த படம் என்றும். தமிழக அரசியலில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் இந்த கதை எழுதப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த படத்தில் அஜித் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நிச்சயம் அவர் நடிப்பார் என்று நம்புவதாக ராஜ்திருசெல்வன் கூறினார்.
அதேபோல் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னனி நாயகனான விஜய்யிடமும் ஒரு கதை கூறியுள்ளதாக கூறிய அவர். இந்த கதை அத்தை பொண்ணு, மாமா பையன் கதை.
பையன் இந்தியாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருப்பார்கள். அத்தை பொண்ணை பார்ப்பதற்காக பையன் அமெரிக்கா செல்வார். அங்கு என்ன நடக்கின்றது என்பதுதான் கதை. விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க ஹாலிவுட் படமாக ஆங்கிலத்தில் இந்த படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழில் விஜய் எத்தனையோ சாதனை செய்துவிட்டார், அவரை ஹாலிவுட்டிலும் சாதனை செய்ய அழைத்து செல்வேன்' என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.