இரண்டாவது முறையாக அஜித்தை இயக்க போகிறாரா இந்த பிரபல இயக்குனர்!

First Published Aug 1, 2018, 4:04 PM IST
Highlights
ajith acting director vijay direction for second movie


தொடர்ச்சியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். எனவே அவருடைய ரசிகர்களுக்கே இந்த கூட்டணி அலுத்துவிட்டது என்றே கூறலாம். இருந்தும் இயக்குனர் சிவா மீது உள்ள நம்பிக்கையில் தற்போது "விசுவாசம்" திரைப்படத்தில் அஜித் நடித்துவருகிறார். 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தினை இயக்கும் வாய்ப்பு எந்த இயக்குனருக்கு கிடைக்கும் என்பது தான் தற்போது கோலிவுட்டில் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த பட்டியலில் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் இயக்குனர் வினோத், விஷ்ணு வர்தன், உள்ளிட்ட சில இயக்குனர்கள் பெயர் இருந்தது பலரும் அறிந்ததே. ஆனால் தற்போது, இந்த வாய்ப்பு அஜித்தை வைத்து "கிரீடம்" திரைப்படத்தினை இயக்கிய ஏ.எல்.விஜய்க்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தினை லைக்கா புரொடெக்சன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடித்து வெளியான அதிரடி திரைப்படமான "அத்தாரின்டிகி தாரேதி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

எனவே இந்த படத்தை தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க, அதில் அஜித் நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்த எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. 

click me!