வாழ்க்கையை மாற்றிய கொரோனா… ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!!

Published : Mar 07, 2022, 06:42 PM IST
வாழ்க்கையை மாற்றிய கொரோனா… ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!!

சுருக்கம்

கொரோனா தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைக்கும், பிந்தைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைக்கும், பிந்தைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிகள் கடந்த ஜனவரி மாதம் பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அது பேசுபொருளாக மாறியது. சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், 18 ஆண்டுகளாக ஒன்றாக நண்பர்களாக, இணையாக, பெற்றோராக, நலம்விரும்பிகளாக ஒருவருக்கு ஒருவர் இருந்தோம். இந்தப் பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளுதல் முதலானவை நிரம்பியிருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் இருவரும் நிற்கிறோம்.

ஐஷ்வர்யாவும், நானும் தம்பதியாக இருப்பதில் இருந்து பிரிந்து, தனிமனிதர்களாக எங்களைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக் கொள்ள போகிறோம். எங்கள் முடிவை மதிப்பதோடு, தனிப்பட்ட விவகாரத்தை எதிர்கொள்ள எங்களுக்கு நேரம் தேவை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். ஓம் நமச்சிவாய! அன்பைப் பரப்புவோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஐஷ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து தற்போது தொற்றில் இருந்து மீண்டுவிட்டார். இருந்தபோதிலும் அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை என தெரிகிறது. அவருக்கு மீண்டும் காய்ச்சல், தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கொரோனா தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைக்கும், பிந்தைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். ஆனால் உங்களோடு நேரம் செலவழிக்க அழகான, ஊக்கமூட்டுகிற, சுறுசுறுப்பான மருத்துவர்கள் இருக்கும் போது, உங்கள் உடல் பிரச்னைகள் பெரிதாகத் தெரிவதில்லை. எனது மருத்துவர் பிரித்திகா சாரியுடன் பெண்கள் தினத்திற்கு முந்தைய நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் இந்தப் பதிவுக்குப் ரசிகர்கள் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!