ராஜா ராணி 2 வில் மீண்டும் ஜோடி சேரும் தம்பதிகள்..ஆலியாவுக்கு பதில் இவர்தானாம்.

Kanmani P   | Asianet News
Published : Mar 07, 2022, 06:06 PM ISTUpdated : Mar 07, 2022, 07:18 PM IST
ராஜா ராணி 2 வில் மீண்டும் ஜோடி சேரும் தம்பதிகள்..ஆலியாவுக்கு பதில் இவர்தானாம்.

சுருக்கம்

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா சீரியலில் இருந்து வெளியேறுவார் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து சந்தியா கேரக்டரில் ஆலியாவே நடித்து வந்தார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா ராஜா ராணி 2வில் இருந்து விலகி விட்டார்.

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய சீரியலில் ஒன்று ராஜா ராணி. இதில் சஞ்சீவ் - ஆலியா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். வீட்டில் வெள்ளி செய்யும் படிக்காத பெண்ணை திருமணம் செய்யும் நாயகன் அந்த பெண்ணை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடித்தவாறு மாற்றும் சூழலில் ஏற்படும் இன்னல்களை இந்த சீரியல் பிரதிபலித்திருந்தது. 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் மூலம் ஆலியா மனஷா ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார். அவரது வெகுளியான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

அதோடு நடிகர் சஞ்சீவையும் தான்.. இந்த தொடரில் நடிக்கையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதோடு இரண்டாவது குழந்தையும் விரைவில் வரவுள்ளது. ராஜா ராணி தொடரின் அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியானது. இதில் சஞ்சீவுக்கு பதிலாக  சித்து நடிக்கிறார். குழந்தை பிறந்த பிறகு பழைய நிலைக்கு திரும்பிய ஆலியா இந்த தொடரில் படித்த சந்தியாவாக நடித்தது வந்தார். போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கும் ஒருபெண்ணுக்கு வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்கள் படிக்காத ஸ்விட் கடை காரருக்கு மனைவி ஆக்குகிறது.. இருந்தும் தனது ஆசைகளை வெளியில் சொல்லாமல் சந்தியா அந்த குடும்பத்திற்கு ஏற்றார் போல மாற முழு முயற்சி செய்யும் சுவாரஸ்ய நிகழ்வுகள் ஒளிபரப்ப பட்டன. 

இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா சீரியலில் இருந்து வெளியேறுவார் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து சந்தியா கேரக்டரில் ஆலியாவே நடித்து வந்தார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா ராஜா ராணி 2வில் இருந்து விலகி விட்டார்.

மேலும் செய்திகளுக்கு..வாவ்..ஏ.ஆர் ரகுமானின் கோரிக்கைக்கு தலையசைத்த இசைஞானி.. 

இவர்க்கு பதில் யார் நடிக்கவுள்ளனர் என்கிற கேள்வி ரசிக்கிறாள் மத்தியில் எழுந்து வந்ததை தொடர்ந்து. தற்போது இன்ப அதிர்ச்சியாக ஒரு ப்ரோமோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சந்தியாவாக  ஸ்ரேயா வரவுள்ளது கன்பார்ம் ஆகியுள்ளது..நடிகையை  ஸ்ரேயா- சித்து இருவரும் நீண்ட நாள் காதலுக்கும் பிறகு சமீபத்தில் மணமுடித்த புதிய தம்பதிகள். இவர்கள் ஏற்கனவே திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்