பீஸ்ட் நடிகைக்கு அஜித் குறித்து இப்படி ஒரு எண்ணமா ? வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு...

Kanmani P   | Asianet News
Published : Mar 07, 2022, 05:17 PM IST
பீஸ்ட் நடிகைக்கு அஜித் குறித்து இப்படி ஒரு எண்ணமா ? வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு...

சுருக்கம்

நாயகி  பூஜா ஹெக்டே தற்போது நடித்து முடித்துள்ள தளபதி  விஜயின் பீஸ்ட் படம் குறித்து பேசுகையில்..விஜய்யோடு நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றும் அவரோடு நடித்தது நன்றாக இருந்தது என்றும் கூறினார்.

பாகுபலி நாயகன் பிரபாஸ் சமீபத்தில் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே  நாயகியாக நடித்துள்ளார்.யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  உருவாகியுள்ள ராதே ஷ்யாமிற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து யுவன் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தது..ரொமாண்டிக் மூவியான இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து  தற்போது இந்தப் படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.  வருகின்ற மார்ச் 11ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்திற்கான புரமோஷன் விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக் குழு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி படத்தின் நாயகி  பூஜா ஹெக்டே தற்போது நடித்து முடித்துள்ள தளபதி  விஜயின் பீஸ்ட் படம் குறித்து பேசுகையில்..விஜய்யோடு நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றும் அவரோடு நடித்தது நன்றாக இருந்தது என்றும் கூறினார்.

மேலும் தந்து நீண்ட நாள் ஆசைப்பட்டபடி விஜய்யோடு இணைந்து நடித்து விட்டேன். அதேபோல தற்போது அஜித்தோடு நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகதெரிவித்தார். மேலும் ஒருவேளை விஜய் அஜித் என இருவரோடும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிப்பேன் என்றும் தடாலடியாக பேசியுள்ளார். மேலும் ராதே ஷ்யாம் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் கண்டிப்பாக இது உங்களுக்கு பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். இவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் பூஜா ஹெக்டேவின் ஆசை நிறைவேறட்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.

முன்னதாக ராதே ஷ்யாம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்திலிருந்து வெளியான ரொமாண்டிக் சிங்கிள்ஸ் அதிக லைக்குகளை குவித்தது குறிப்பிடத்தக்கது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!