Aishwarya Rajesh controversy : இந்த பழக்கம் வேலைக்காகாது.. உதவியாளரிடம் படு மோசமான நடந்து கொண்ட தமிழ் நடிகை?

Kanmani P   | Asianet News
Published : Dec 16, 2021, 02:43 PM ISTUpdated : Dec 16, 2021, 02:46 PM IST
Aishwarya Rajesh controversy : இந்த பழக்கம் வேலைக்காகாது.. உதவியாளரிடம் படு மோசமான நடந்து கொண்ட தமிழ் நடிகை?

சுருக்கம்

Aishwarya Rajesh controversy : தண்ணீர் கொண்டுவர சிறுது தாமதமானதால் கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ் தன் உதவியாளரை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் வெளியான "காக்கா முட்டை" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்கிற பெயரையும் பெற்று தந்தது.

எனவே தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ஓடிடியில் வெளியான 'திட்டம் இரண்டு' திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமரையும் கையில் எடுத்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ்  பாலிவுட் படமான டாடி படத்தில்  அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

பக்கத்து வீட்டு பொண்ணு போல எல்லோரிடமும் சகஜமாக பழகுபவர் என பெயர் எடுத்துள்ள ஐஸ்வர்யா சமீபகாலமாக சர்சைக்கு மேல் சர்சையில் சிக்கி வருகிறார்.

ஏற்கனவே தன்னிடம் வந்த 40 இயக்குனர்களின் கதைகளும் தன்னை தூங்க வைத்தாக தெரிவித்து செமையாக மாட்டிக்கொண்டார்.

இவரை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் ஒருவரை படு மோசமாக விமரிசித்துள்ளார். இயக்குனர் கூறிய கதையை கேட்ட ஐஸ்வர்யா படு மொக்கையான கதை என கூறியுள்ளார். இது சர்ச்சையாக வெடித்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. அப்போது முன்னணி நடிகையாக இருந்தாலும் தானும் சினிமா தொழிலாளி தான் என்பதை மறந்து சக தொழிலாளியிடம் இவ்வாறு மோசமாக நடந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஸ் குறித்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அதோடு தான் பெரியாள் என எண்ணி தலை கனத்துடன் நடந்து கொள்ளும் பிரபலங்கள் நீண்ட நாட்கள் சினிமா தளத்தில் பயணிப்பது கடினம் என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திரை துறையினர் குறிப்பிட்டு வருகின்றனர்கு சுடுதண்ணீர் வேண்டுமென உதவியாளரிடம் கேட்டுள்ளார். உடனடியாக உதவியாளரும் சுடு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். தண்ணீர் கொண்டுவர சிறுது தாமதமானதால் கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ் உதவியாளரை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

முன்னணி நடிகையாக இருந்தாலும் தானும் சினிமா தொழிலாளி தான் என்பதை மறந்து சக தொழிலாளியிடம் இவ்வாறு மோசமாக நடந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஸ் குறித்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதோடு தான் பெரியாள் என எண்ணி தலை கனத்துடன் நடந்து கொள்ளும் பிரபலங்கள் நீண்ட நாட்கள் சினிமா தளத்தில் பயணிப்பது கடினம் என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திரை துறையினர் குறிப்பிட்டு வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்