Vikram Affected corona: திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. கமல் - அர்ஜுனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கு கொரோனா!

Published : Dec 16, 2021, 01:53 PM ISTUpdated : Dec 16, 2021, 03:00 PM IST
Vikram Affected corona: திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. கமல் - அர்ஜுனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கு கொரோனா!

சுருக்கம்

அடுத்தடுத்து திரை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது. கமல் - அர்ஜுன் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அடுத்தடுத்து திரை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது. கமல் - அர்ஜுன் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  'விக்ரம்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் கமல் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்கு பின் அவருக்கு லேசான இருமல் இருந்ததை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல்.

மேலும் செய்திகள்: Pushpa Movie Review: புஷ்பா படம் எப்படி இருக்கு? அரேபிய சினிமா விமர்சகரின் முதல் விமர்சனம்! வைரலாகும் பதிவு!

 

இவரைத்தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுன், 'சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து வெளியான கையேடு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் கூறி அதிரவைத்தார். இப்படி அடுத்தடுத்த பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, கொரோனாவின் 3 ஆவது அலை துவங்குமா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பியது.

மேலும் செய்திகள்: Samantha Divorce Reason: சமந்தாவை விவாகரத்து செய்ய காரணம் இதுவா? குத்தி காட்டுவது போல் பேசிய நாகசைதன்யா!

 

இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கோப்ரா' படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவருக்கு, கடந்த இரண்டு நாட்களாக லேசான இரும்பல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால், ஆழவார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை இவருக்கு மேற்கொள்ள பட்டது. அப்போது நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

லேசான பாதிப்பே உள்ளதால், தற்போது நடிகர் விக்ரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறாமல்... வீட்டிலேயே தன்னை தனிமை படுத்தி கொண்டு, மருத்துவர்களின் அறிவுரை படி சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!