Valimai Stunt Scene: 'வலிமை' ஸ்டண்ட் சீன்.. அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்த 'ஆன்டி இந்தியன்' பட தயாரிப்பாளர்!

Published : Dec 16, 2021, 01:09 PM IST
Valimai Stunt Scene: 'வலிமை' ஸ்டண்ட் சீன்.. அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்த 'ஆன்டி இந்தியன்' பட தயாரிப்பாளர்!

சுருக்கம்

ஆன்டி இந்தியன் (Anti Indian) படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா சமீபத்தில் வலிமை படத்தில் இடம்பெற்ற மேக்கிங் வீடியோவில் அஜித்தின் ஸ்டண்ட் சீனை பார்த்து விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஆன்டி இந்தியன் (Anti Indian) படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா சமீபத்தில் வலிமை படத்தில் இடம்பெற்ற மேக்கிங் வீடியோவில் அஜித்தின் ஸ்டண்ட் சீனை பார்த்து விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 'வலிமை' படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிடது. இதில் வலிமை படம் எத்தனை தடைகளைக் கடந்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இப்படம் சந்தித்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை உணர்வுப்பூர்வமாக தொகுத்து இந்த மேக்கிங் வீடியோவை உருவாக்கி இருந்தனர். மேலும் அஜித் உயிரை பணயம் வைத்து செய்த ஸ்டண்ட் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவெப்பும் கிடைத்தது.

ஆனால் இதை விமர்சிக்கும் விதமாக தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார் சமீபத்தில் ப்ளூ சட்டை மாறன் இயக்கி, நடித்திருந்த, படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது... "இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..?" என தன்னுடைய விமர்சனத்தை கடுமையாக முன் வைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!