வில் வித்தையில் கெத்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் வீடியோ..!

Published : Feb 12, 2021, 07:44 PM IST
வில் வித்தையில் கெத்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.   

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற அடையாளத்தையும் பெற்றுவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த “வோர்ல்ட் பேமஸ் லவ்வர்“ படம் தெலுங்கில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் வில் வித்தையில், கலக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோ இதோ... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?