அடுத்த பிரம்மாண்டத்தை உறுதி செய்த இயக்குநர் ஷங்கர்... வெளியானது எதிர்பார்ப்பை எகிர வைக்கும் அசத்தல் அறிவிப்பு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 12, 2021, 06:14 PM ISTUpdated : Feb 12, 2021, 07:22 PM IST
அடுத்த பிரம்மாண்டத்தை உறுதி செய்த இயக்குநர் ஷங்கர்... வெளியானது எதிர்பார்ப்பை எகிர வைக்கும் அசத்தல் அறிவிப்பு!

சுருக்கம்

உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். கிரேன் விபத்து, கொரோனா லாக்டவுன், கமல் அறுவை சிகிச்சை என பல காரணங்களால் தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை. 

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

 ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.  படத்தின் ஷூட்டிங் மற்றும் பிற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். கிரேன் விபத்து, கொரோனா லாக்டவுன், கமல் அறுவை சிகிச்சை என பல காரணங்களால் தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தான் ராம்சரணை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை ஷங்கர் ஆரம்பிக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெஷல் சர்ப்ரைஸாக இன்றே வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு