
‘ஏ1’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த மேடையில் இயக்குநர் ஜான்சன் பேசியது சோசியல் மீடியாவில் வைரலானது. காரணம் அவர் ஏதோ போதையில் பேசுவது போல் உளறியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இயக்குநரின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் வரமாட்டார் என விழா ஆரம்பிக்கும் முன் கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இயக்குநர் ஜான்சன் மேடையேறினார். சரி அவசர, அவசரமாக வந்திருக்கிறார் என்ன பேசுவார் என கேட்கலாம் என காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவர் உளறியக்கொட்டியது தான். ஏன் லேட் ஆனது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘லேட் ஆகிடுச்சி அவ்வளவு தான்’என பதிலளித்தார்.
நான் எல்லாம் ஒர்த்தே இல்ல என்ற வார்த்தைய மட்டும் பலமுறை திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். தன்னுடைய படத்தில் வேலை செய்த டெக்னீஷியன்களின் பெயரைக் கூட சரியாக கூறி பாராட்டவில்லை. அதேபோல் சந்தானத்தின் நடிப்பை பற்றியோ, படத்தின் கதையை பற்றியோ கூட எதுவும் பெரிதாக பேசவில்லை. ‘ஏ1’ படத்தை போலவே பாரிஸ் ஜெயராஜ் படத்தையும் ஜாலியாக பார்க்கலாம்... வேற சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
நீங்கள் ஒர்த் இல்ல ஒர்த் இல்லனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே., மக்களும் படம் ஒர்த் இல்லனு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். நான் உண்மையை தான் சொல்லுறேன்... போனால் போகட்டும் என பதிலளித்து கொடுத்தார். அதுவரை அமைதியாக இருந்த சந்தானம் திடீரென எழுந்து வந்து, கார் விபத்து நடந்ததால் கொஞ்சம் பிரச்சனை அதான் இப்படி பேசுகிறார். வா வந்து உட்காரு என ஜான்சனை அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: சன் டி.வி.யின் பிரபல சீரியலில் இருந்து நடிகை விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி...!
இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள ஜான்சன், அந்த விழாவிற்கே நான் வரவேண்டாம் என நினைத்தேன். காரணம் என்னுடைய கார் விபத்தில் சிக்கியது. அதனால் அங்கு செல்ல லேட் ஆனது, இதனால் ஏதாவது பிரச்சனை வருமா? என தயங்கினேன். நான் மேடையில் ஏறியதும் நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிட்டதால் என்ன பேசுவது என்ற குழப்பத்தில் அப்படி பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். நான் ஒர்த் இல்லை என்று வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை... இப்போது தான் இரண்டாவது படம் எடுக்கிறேன் என்ற எண்ணத்தில் தான் அப்படி கூறினேன் எனக்கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.