
15 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில், திடீர் என 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து, அதிர்ச்சி கொடுத்தார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். மீரா உள்ளே வருவதற்கு முன், அமைதியாக போன இந்த நிகழ்ச்சியில், மெல்ல மெல்ல பிரச்சனைகளும் வர துவங்கியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா, தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தன்னை கவர்ந்த போட்டியாளர்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா தத்தாவுக்கு, மலேசியன் பாடகர் முகன்ராவ் மீது ஈர்ப்பு உள்ளதாகவும், அவருடைய இனிமையான குரல் தன்னை கவர்ந்துள்ளதாகவும், முகன்ராவ் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இவரை தொடர்ந்து இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவையும் தனக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.