கிளம்பியது பூகம்பம்..! மீரா மிதுனின் தாயார் புது அவதாரம்..!

Published : Jun 28, 2019, 01:53 PM IST
கிளம்பியது பூகம்பம்..! மீரா மிதுனின் தாயார் புது அவதாரம்..!

சுருக்கம்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 16 ஆவது போட்டியாளராக களமிறங்கிய மாடல் அழகியான மீரா மிதுனின் தாயார் சியாமளா சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்து உள்ளார்.  

கிளம்பியது பூகம்பம்..! மீரா மிதுனின் தாயார் புது அவதாரம்..! 

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 16 ஆவது போட்டியாளராக மாடல் அழகியான மீரா மிதுனின் தாயார் சியாமளா சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்து உள்ளார்.  

இதற்கு முன்னதாக, "தனக்கு எதிராக தொழில் போட்டியாளர் ஜோ மைக்கேல் சதி செய்கிறார்கள் என்று பிரபல மாடல் மீரா மிதுன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த நிலையில், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 - ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால், இவர் குறித்து, ஜோ மைக்கேலிடம் youtube சேனல் ஒன்று நடத்திய நேர்காணலில், மீரா மிதுனை மிரட்டும் வகையிலும், அவரை விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வைப்பேன்.. என தெரிவித்து உள்ளார். இதனை பார்த்த, மீரா மிதுனின் தாயார் சியாமளா ஜோ மைக்கேல் மீது, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்து உள்ளார்.

அந்த விவரம் உள்ளே...

எனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மீரா மிதுனுக்கு, இதனால் பிரச்சனை வருமா..? தன் தாய் தற்போது ஜோ மீது புகார் கொடுத்து இருப்பது கூட தெரியாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார் மீரா மிதுன். இதன் தொடர்ச்சியாக  இந்த பிரச்சனை வேறு எப்படியெல்லாம் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.   
 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?