சும்மா இருக்க மாட்டேன்...! குஷ்பு போட்ட ட்விட்டால் சண்டைக்கு பாய்ந்த காயத்ரி ரகுராம்!

Published : Jun 28, 2019, 01:17 PM IST
சும்மா இருக்க மாட்டேன்...! குஷ்பு போட்ட ட்விட்டால் சண்டைக்கு பாய்ந்த காயத்ரி ரகுராம்!

சுருக்கம்

நடிகை குஷ்புவும், நடன இயக்குனர் காயத்ரி ரகுராமும் அடிக்கடி ட்விட்டரில் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.  

நடிகை குஷ்புவும், நடன இயக்குனர் காயத்ரி ரகுராமும் அடிக்கடி ட்விட்டரில் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம் இருவரும் அரசியல், சமூக விஷயங்களை,  சமூக வலைத்தளத்தில், தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருடியதாக 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை பிடித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி தாக்கியதாக சர்ச்சை எழுந்தது.

அந்த இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  ஜெய் ஸ்ரீராம் சொல்லும்படி வற்புறுத்திய வீடியோவை, சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பரவியது.

இது குறித்து, நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி ஒரு இளைஞரை கொன்றுவிட்டனர்.  இதுதான் புதிய இந்தியாவா? என ஆவேசப்பட்டார்.

குஷ்புவிற்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், இந்துக்களை கொலைகாரர்கள் போல் பார்ப்பது ட்ரெண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் இதுபோல் தவறு செய்யும்போது குஷ்பு  வாய் திறப்பதில்லையே என்றார்.  அதற்கு பதில் அளித்த குஷ்பு உங்களை போன்றவர்கள் உடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் உறவினர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன் எனவே வாயை மூடிகொண்டு  இருக்கவும் என்கிறார். 

இதற்கு மீண்டும் பதிலளித்த காயத்ரி ரகுராம்,  நீங்கள் என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்...  மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது பகை இல்லை என்று கூறினார்.  குஷ்பு - காயத்ரி ரகுராமின் மோதல் வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!