ரஜினி, அஜீத் படத்தயாரிப்பாளர் திடீர் மரணம்...

Published : Jun 28, 2019, 02:53 PM IST
ரஜினி, அஜீத் படத்தயாரிப்பாளர் திடீர் மரணம்...

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘குசேலன்’ அஜீத்தின் ‘பில்லா’மாதவனின் ‘எவனோ ஒருவன்’ போன்ற முக்கியமான படங்களைத் தயாரித்த பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ்.சுவாமிநாதன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘குசேலன்’ அஜீத்தின் ‘பில்லா’மாதவனின் ‘எவனோ ஒருவன்’ போன்ற முக்கியமான படங்களைத் தயாரித்த பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ்.சுவாமிநாதன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

நீரிழ்வு சிகிச்சைக்காக சில தினங்களாகவே சுவாமிநாதன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இவரது மனைவி பெயர் உமா ஸ்வாமிநாதன் மற்றும் இவருடைய மகள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.

இவரது நிறுவனம் 2000 களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று. இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு  'கண்ணாமூச்சி  ஏனடா' என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார், மற்றும் 'மொழி' படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, தளபதி விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்', அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை  தயாரித்ததோடு அவற்றை விநியோகம் செய்திருக்கிறார்.இந்நிறுவனம் தமிழ் சினிமாவில் பல கோடிகளை இழந்ததால் ஒரு கட்டத்துக்குப் பிறகு தயாரிப்புப் பணிகளை அடியோடு நிறுத்தியிருந்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?