மீண்டும் ஜெஸ்ஸியாக மாறுகிறார் திரிஷா...

 
Published : Jul 03, 2017, 05:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மீண்டும் ஜெஸ்ஸியாக மாறுகிறார் திரிஷா...

சுருக்கம்

Again trisha is taking like jessie role with nivin pauly

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்து வெளிவந்த "விண்ணை தாண்டி வருவாயா" திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவை பெற்ற படமாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது திரிஷா நடித்த, ஜெஸ்ஸி கதாபாத்திரம் தான்.

இந்த படத்தில் தோன்றும் திரிஷாவை பார்ப்பதற்காகவே பல இளைஞர்கள் நான்கு, ஐந்து முறை இந்த படத்தை பார்த்ததாக கூறினார் இந்த திரைப்படம் வெளிவந்தபோது.

இந்நிலையில் மீண்டும் திரிஷா இதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

முதல் முதலில் திரிஷா மலையாளத்தில் நடித்து வரும் படமான 'ஹேய் ஜூட்'  படத்தில், ஜெஸ்ஸி போலவே அழகாக காட்டன் புடவையுடன் தோன்றும் கிறிஸ்தவ பெண்ணாக நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக "நேரம்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நிவின் பாலி நடிக்கிறார்.

இந்த படம் குறித்து திரிஷா கூறுகையில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாகவும் தான் திரையுலகில் கற்று கொண்ட அனைத்து திறமைகளையும் இந்த படம் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!