
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, 15 போட்டியாளர்களின் ஒருவரான நடிகை அனுயா, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை நாள் ஜூலிக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் பரணியையே இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவரின் இந்த அதிரடி மாற்றம் பலரையும் அதிர்ச்சிக்குளாக்கி உள்ளது. இதில் இருந்து ஜூலியின் பச்சோந்தி தனம் தெளிவாக தெரிகிறது என்று பலர் கூறிவருகின்றனர்.
ஜூலியை நடன இயக்குனர் காயத்திரி, ஆர்த்தி, சினேகன், நமீதா போன்ற பலர் டார்கெட் செய்து கிண்டல், கேலி, போன்றவைக்கு ஆன போது ஜூலிக்கு ஆதரவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.