மீண்டும் ஓர் செல்போன் சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்! வைரலாகும் வீடியோ!

Published : Nov 11, 2018, 01:50 PM IST
மீண்டும் ஓர் செல்போன் சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

தமிழ் சினிமாவில்  அனைத்து  நடிகர்கள் மற்றும் பிரபலங்களால் மிகவும் மரியாதையுடன் பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார்.   

தமிழ் சினிமாவில்  அனைத்து  நடிகர்கள் மற்றும் பிரபலங்களால் மிகவும் மரியாதையுடன் பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். 

தற்போது இவர் திரையுலகை விட்டு சற்று விலகி இருந்தாலும், மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ராமாயணம் பற்றிய  உரை நிகழ்த்தி வருகிறார். மேலும் தான் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சி, யோகா பற்றிய விழிப்புணர்வு பற்றியும் பேசிவருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் இவர்  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, மதுரையில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இளைஞர் ஒருவர், செல்பி எடுத்த போது, திடீர் என யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் அந்த இளைஞர் கையில் வைத்திருந்த போனை கீழே தள்ளி விட்டார். இவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து தன்னுடைய தவறுக்கு ஒரு வீடியோ வெளியிட்டு, தன்னுடைய செயல் கோவத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். அந்த இளைஞர்கருக்கு 22 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல் போன் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

இந்த பிரச்னையை தொடர்ந்து தற்போது மீண்டும் செல்போன் மூலம்  ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது .  சமீபத்தில் விழா ஒன்றில்கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகுமார் பேச்சை, செய்தியாளர் ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் ரெகார்ட் செய்துள்ளார். அப்போது திடீர் அந்த செய்தியாளருக்கு போன் வந்துள்ளது. இதனால் ஒரு நிமிடம் மிகவும் டென்ஷன் ஆன சிவகுமார் போன் முறைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த காட்சி இதோ:

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ