’என்னுடைய கேரக்டர் டம்மி என்பதைத் தெரிந்தே செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்’ ...கீர்த்தி சுரேஷ்

Published : Nov 11, 2018, 01:05 PM IST
’என்னுடைய கேரக்டர் டம்மி என்பதைத் தெரிந்தே செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்’ ...கீர்த்தி சுரேஷ்

சுருக்கம்

’நடிகையர் திலகம்’ தான் நான் நடித்த கடைசி சுயசரிதைப் படம். இனி என் வாழ்நாளில் யாருடைய சுயசரிதைக் கதைகளிலும் நடிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’எ ன்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

’நடிகையர் திலகம்’ தான் நான் நடித்த கடைசி சுயசரிதைப் படம். இனி என் வாழ்நாளில் யாருடைய சுயசரிதைக் கதைகளிலும் நடிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’எ ன்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

‘சர்கார்’ படத்தில் என் கேரக்டர் டம்மியாக அமைந்துவிட்டதற்கு எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்தபோதே இதை உணர்ந்திருக்கவே செய்தேன். இயக்குநர் முருகதாஸும் ஒரு கட்டத்தில் எனக்கு கதையில் வேலையே இல்லை என்பதைப்புரிந்துகொண்டு,  என்னை சமாதானப்படுத்தி, ‘ஸாரிம்மா நான் ‘நடிகையர் திலகம்’ படம் பார்க்கலை. அடுத்த படத்துல உனக்கு பிரமாதமான கேரக்டர் குடுக்கிறேன் என்று பிராமிஸ் பண்ணியிருக்கிறார்.

இதே போல் ‘சண்டக்கோழி2’வும் என்னைக் கவிழ்த்துவிட்டது. அதன் முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் அதகளம் பண்ணியிருந்தார். அவரை ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் படத்தை ஒப்புக்கொண்டேன் என்று இன்றுவரை புரியவில்லை.

இந்தத் தோல்விகளால் நான் ஏதோ படங்கள் இல்லாமல் சும்மா இருப்பதைப்போல் உச்சுக்கொட்டுகிறார்கள். என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் ’குஞ்சலி மார்க்கர்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து சுமார் 20 படங்களுக்கு கதைகேட்டுவருகிறேன்.

அந்த வரிசையில் என்.டி. ஆரின் சுயசரிதைப் படத்தில் அதே சாவித்திரி அம்மா பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது.கொஞ்சமும் யோசிக்காமல் மறுத்துவிட்டேன். ’நடிகையர் திலகம்’ படம் தந்த அனுபவத்தில் சொல்கிறேன். இனி என் வாழ்நாளில் யாருடைய சுயசரிதைக் கதைகளிலும் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார்  கீர்த்தி காரணம் எதுவும் சொல்லாமல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!
மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்