விக்னேஷ் நயன் காதலில் திடீர் விரிசல்...!! அடித்து ஒரம் கட்டிய நயன்தாரா, விருது நிகழ்ச்சியில் பரபரப்பு...!!

Published : Jan 06, 2020, 12:00 PM IST
விக்னேஷ் நயன் காதலில் திடீர் விரிசல்...!! அடித்து ஒரம் கட்டிய நயன்தாரா,  விருது நிகழ்ச்சியில் பரபரப்பு...!!

சுருக்கம்

அடிக்கடி கோயிலுக்கு செல்வது பற்றி கேட்டதற்கு, மன நிம்மதிக்காக செல்வதாக கூறினார்.  விக்னேஸ் பற்றிய கேள்விக்கு  அவர் பதில் அளிக்காதது  அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .   

சமீபத்தில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் நடிகை நயன்தாரா மட்டும் தனியாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது அதில் நடிகர் விஜய் சேதுபதி ,  சமந்தா .  நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .  எந்த தனியார் நிகழ்ச்சிக்கும் அவ்வளவு எளிதில் வராத நயன்தாரா இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தது ரசிகர்களை வியப்படைய செய்தது. இந் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா எளிமையான முறையில் புடவை அணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது முதல்,  நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கசப்பானதாகவும் சோதனை மிகுந்ததாகவுமே  இருந்துள்ளது.  அவர் எத்தனை உச்சத்துக்கு சென்றாலும் அவரது காதல் வாழ்க்கை என்பது தோல்விமேல் தோல்வியே சந்தித்துள்ளார்.   கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும்  நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.  எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் காதலன்  விக்னேஷ் சிவனுடன் தான் சொல்லுவார் நயன்,  ஆனால் இந்த விருது வழங்கும் விழாவுக்கு அவர் தனியாகவே வந்திருந்தார் அதனால் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது .  நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த நயன்தாராவிடம் காதலர் விக்னேஷ் சிவன் குறித்து கேள்விமேல்  கேள்வி கேட்கப்பட்டது ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை . அடிக்கடி கோயிலுக்கு செல்வது பற்றி கேட்டதற்கு, மன நிம்மதிக்காக செல்வதாக கூறினார்.  விக்னேஸ் பற்றிய கேள்விக்கு  அவர் பதில் அளிக்காதது  அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

நயன்தாராவுக்கு அந்த நிகழ்ச்சியில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது,   விசுவாசம் மற்றும் திகில் படங்களுக்கு ஃபேவரெட் நடிகை விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது .  நயன்தாரா விருது பெற்றுள்ள நிலையில் காதலர் விக்னேஸ்வரன் அவருக்கு ஒரு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது .  விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் .  கடந்த புத்தாண்டில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அசிங்கப்பட்டது போல விக்னேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .  ஆகவே அந்த கோபம் இன்னும்  நயன்தாராவுக்கு தனியவில்லை போல என்று பலர் பேசிக்கொள்கின்றனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?