திருமணத்திற்கு பின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நமீதா...!

 
Published : Mar 24, 2018, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
திருமணத்திற்கு பின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நமீதா...!

சுருக்கம்

after maarige nemeetha shared the glamour photo

நமீதா அறிமுகம்:

நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 

கவர்ச்சி:
 
பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார். 

இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது. 

ரீஎன்ட்ரி:

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். 

பிக் பாஸ்:

மேலும் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு இருந்த போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டர். 

திருமணம்:

திடீர் என தன்னுடைய திருமணம் அறிவிப்பை வெளியிட்ட இவர், தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீரவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார். கடந்த சில மாதத்திற்கு முன் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. 

திருமணம் முடித்த பின் தற்போது தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நமீதா. இதை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் திருமணத்திற்கு பின் உனக்கு இது தேவையா என்பது போல் நமிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!